Jio Airtel VI in 2021 best prepaid recharge plans under Rs500 list Tamil News : ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற இணைய சேவை வழங்குநர்கள் அனைவரும் மாதாந்திர மற்றும் வருடாந்திர திட்டங்களுக்கு ஏற்ப தங்கள் சொந்த பலன்களை வழங்குகிறார்கள்.
நீங்கள் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைத் தேடுகிறீர்களானால் அல்லது எந்த நெட்வொர்க் வழங்குநர் சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை ரூ.500-க்குள் வழங்குகிறது என்று யோசித்துக்கொண்டிருந்தால், கீழே உள்ள பட்டியலைப் பார்க்கலாம்.
ஜியோ vs ஏர்டெல் vs வி : ரூ.500-க்குள் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஜியோ ரூ.249-க்கான திட்டத்தை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் JioTv, JioCinema போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலைத் தருகிறது.
ரூ.299 விலையில் வி ஒரு திட்டத்தை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு மற்றும் Vi Movies மற்றும் TV-க்கான அணுகலுடன் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 4GB டேட்டாவை வழங்குகிறது.
ஏர்டெல்லின் ரூ.298 திட்டம், 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கான அணுகலை வழங்குகிறது.
உங்களுக்கு அதிக டேட்டா தேவை மற்றும் இன்னும் கொஞ்சம் செலவு செய்ய தயார் என்றால், ஜியோவின் ரூ.349 திட்டம், 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டாவையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும், ஜியோ ஆப்ஸிற்கான இலவச அணுகலையும் தருகிறது.
ஜியோவின் ரூ.444 திட்டத்தில் 56 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் JioTv, JioCinema மற்றும் வேறு சில ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் ஆகியவை அடங்கும்.
ஒப்பிடுகையில், Vi-ன் ரூ.449 திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகளுடன் 56 நாட்களுக்கு 4ஜிபி/டேட்டாவைப் பெறும். ஏர்டெல் ரூ.449-க்கான திட்டத்தையும் வழங்குகிறது. இது, வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கான அணுகல் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு ஆகியவற்றைப் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil