Jio Vs Airtel Vs Vodafone : சிறந்த மாதாந்திர ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது?

நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள், ஃப்ரீ காலிங் மற்றும் ஃவோடஃபோன் ப்ளை மற்றும் ஜீ5 சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது.

Jio Airtel Vodafone Best monthly prepaid recharge plans
Jio Airtel Vodafone Best monthly prepaid recharge plans

Jio Airtel Vodafone Best monthly prepaid recharge plans : ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் வழங்கும் திட்டங்களில் சிறந்த மாதாந்திர திட்டங்கள் எவையெவை என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Reliance Jio prepaid plans with 28 days validity

28 நாட்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்திருக்கிறது ஜியோ நிறுவனம். இதில் மிகவும் விலை குறைவானது ரூ. 199 திட்டம் தான். நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மொத்தமாக மாதத்திற்கு 42ஜிபி டேட்டா இது. ரூ. 249க்கான பேக்கில் தினமும் 2ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மிகவும் காஸ்ட்லியான பேக் என்றால் ரூ. 349 பேக் தான். இது தான் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த அனைத்து ப்ளான்களும் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களை வழங்குகிறது. ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்கில் அழைத்து பேசும் போது முதல் 1000 நிமிடங்கள் இலவசம்.

மேலும் படிக்க : ககன்யான் மட்டும் இஸ்ரோவின் திட்டமில்லை… பாராளுமன்றத்தில் பட்டியலிடப்பட்ட திட்டங்கள் ஒரு பார்வை!

Bharti Airtel prepaid plans with 28 days validity

ஏர்டெல் நிறுவனத்தில் வழங்கப்படும் ஆஃபர்களில் மிகவும் விலைகுறைவானது ரூ. 219க்கான ஆஃபர் தான். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ஆஃபர் மூலம் 1ஜிபி டேட்டாவை நாள் ஒன்றுக்கு பெற்றுக் கொள்ள முடியும். அன்லிமிட்டட் கால்கள் மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து வரும் ரூ. 249க்கான ப்ளானில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ. 298க்கான ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ. 398க்கான ப்ளானில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வரை கிடைக்கிறது. இத்துடன் இல்லாமல் ரூ. 279க்கான ப்ளானில் 1.5ஜிபி டேட்டாவுடன் ரூ. 4 லட்சத்திற்கான லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கவரும் கிடைக்கிறது. ரூ. 349 திட்டத்தில் 2ஜிபி டேட்டாவுடன் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் 28 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.

மேலும் படிக்க : ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கார்களின் அணி வகுப்பு… உங்களின் “வாவ்”க்கு நாங்கள் கேரண்டி!

Vodafone-Idea prepaid plans with 28 days validity

வோடஃபோன் நிறூவனம் வழங்கும் திட்டங்களில் மிகவும் விலை குறைவானது ரூ. 219க்கான திட்டம் ஆகும். இதில் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ள முடியும். இது நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ. 249க்கான ப்ரீபெய்ட் திட்டத்தில் வோடஃபோன் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ. 299க்கான திட்டத்தில் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 398க்கான ப்ளானில் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த பேக்கேஜ்கள் அனைத்திலும் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள், ஃப்ரீ காலிங் மற்றும் ஃவோடஃபோன் ப்ளை மற்றும் ஜீ5 சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jio airtel vodafone best monthly prepaid recharge plans

Next Story
ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கார்களின் அணி வகுப்பு… உங்களின் “வாவ்”க்கு நாங்கள் கேரண்டி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com