Jio, Airtel, Vi prepaid plans Tamil News: தொற்றுநோயால் ஏற்பட்ட மிகப் பெரிய பின்விளைவுகளினால், மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அலுவலக மீட்டிங், ஆன்லைன் வகுப்புகள், க்ரூப் ப்ரெசென்ட்டேஷன் என அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே செய்துகொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், பொழுதுபோக்கு, ஷாப்பிங், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உரையாடல் உட்பட நமது தேவைகள் அனைத்தும் ரீசார்ஜ்-திட்டங்களின் எல்லைக்குள் வந்துவிட்டன. சில நேரங்களில், அதிகப்படியான மாதாந்திர ரீசார்ஜ்களிலிருந்து விடுபட நீங்கள் நினைக்கலாம். அதனால்தான், ரூ.600 விலையில் 3 மாதங்களுக்கு மேலாக உழைக்கும் சில சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
ஜியோவின் ரூ.599 ரீசார்ஜ் திட்டம்
ரூ.599-ல் ஜியோவின் இந்த திட்டம், 168 ஜிபி மொத்த டேட்டாவை உள்ளடக்கியது. தினசரி 2 ஜிபி டேட்டா என 84 நாட்கள் வரை இந்த பேக் செல்லுபடியாகும். இதனோடு, ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடெட் அழைப்பு வசதி மற்றும் ஜியோவிலிருந்து ஜியோ அல்லாத FUP அழைப்புக்கு 3,000 நிமிடங்கள் ஆகிய வசதிகளை வழங்குகிறது. இந்த பேக், அனைத்து ஜியோ செயலுக்கும் காம்ப்ளிமென்ட்டரி சந்தாவுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியுடன் தொகுக்கப்பட்டுள்ளது.
ஜியோ ரூ.555 ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் ரூ.555 திட்டம், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் மொத்தம் 126 ஜிபியுடன் 84 நாட்களுக்குச் செல்லுபடியாகும் டேட்டாவை வழங்குகிறது. இது தவிர, ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பையும், ஜியோ முதல் ஜியோ அல்லாத FUP வரை 3,000 நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதிகளையும் வழங்குகிறது. வழக்கம் போல், இது அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் ஓர் காம்ப்ளிமென்ட்டரி சந்தாவை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.598 ரீசார்ஜ் திட்டம்
இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் உண்மையான அன்லிமிடெட் அழைப்பு வசதியையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என 84 நாட்கள் வரை செல்லுபடியாகும் மதிப்பையும் வழங்குகிறது. இதனோடு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலி, விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஷா அகாடமியுடன் இலவச 1 ஆண்டு ஆன்லைன் பாடநெறி மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.150 கேஷ்பேக் ஆகியவற்றின் கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.379 ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெலின் ரூ.379 திட்டம், 6 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 900 எஸ்எம்எஸ் வசதியுடன் வழங்குகிறது. கூடுதலாக, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலி, விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஷா அகாடமியுடன் இலவச 1 ஆண்டு ஆன்லைன் பாடநெறி மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.150 கேஷ்பேக் ஆகியவற்றுக்கான அணுகலையும் வழங்குகிறது.
Vi -வோடபோன்-ஐடியா ரூ.599 ரீசார்ஜ் திட்டம்
வோடபோன்-ஐடியா-விலிருந்து வரும் இந்த ரூ.599 பேக்கில், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை 84 நாட்கள் செல்லுபடியாகும் அம்சங்கள் உள்ளன. கூடுதலாக, வார இறுதி டேட்டா மாற்றம் மற்றும் கூடுதல் பயன்பாடு 5 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இதன் மூலம், MPL-ல் விளையாடுவதற்கு ரூ.125 போனஸ் ரொக்கத்தையும், ஜொமாடோவின் உணவு ஆர்டர்களில் தினசரி ரூ.75 தள்ளுபடியையும் வழங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"