Jio, Airtel, Vodafone Prepaid Recharge Offers : ரூ.500 விலையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi (முன்பு வோடபோன்) பல சலுகைகளுடன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. ஆனால், அதைவிட குறைந்த பட்ஜெட்டில் ஆல்ரவுண்டர் ரீசார்ஜ் திட்டங்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அவை நிறைய டேட்டா அல்லது டாக்டைம் அல்லது இரண்டும் ஒன்றாக நியாயமான விலையில் கிடைக்கும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் ரூ.100 விலைக்குக் கீழ் வருகின்றன.
ரூ.100-க்கு கீழ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.100-க்கு கீழ் பல்வேறு திட்டங்கள் இல்லை. ஆனால், ஜியோ வழங்கும் திட்டங்கள் போதுமானவை மற்றும் போட்டியாளர்களை விட மிகச் சிறந்த நன்மைகளைக் கொண்டுள்ளன. நிச்சயம் நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சில நல்ல டாக்டைம் அல்லது டேட்டா திட்டங்களை ஜியோ வழங்குகிறது.
குறைந்த விலையில் பெரும்பாலான டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ரூ.101 4 ஜி டேட்டா பேக் வாங்கவும். இது மொத்தம் 12 ஜிபி டேட்டாவையும், ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளுக்கு 1,000 நிமிடங்களையும் வழங்குகிறது.
6 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு 500 நிமிடங்கள் வழங்கும் ரூ.51 திட்டமும் உள்ளது. ரூ.21 திட்டம் அன்லிமிடெட் 2 ஜிபி டேட்டாவையும், ஜியோ அல்லாத எண்களுக்கு 200 நிமிடங்களையும் வழங்குகிறது.
இதில் பிற திட்டங்களும் உள்ளன. அவை உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டின் படி நீங்கள் கருத்தில் கொள்ளலாம். ரூ.10 ஜியோ ரீசார்ஜ் திட்டம், 124 ஐ.யூ.சி நிமிடங்கள் + 1 ஜிபி காம்ப்ளிமென்டரி டேட்டா அளிக்கிறது. மேலும், ரூ.20 ஜியோ திட்டம் 24 ஜி.யூ.சி நிமிடங்களுடன் 2 ஜிபி தரவையும் வழங்குகிறது.
ரூ.50 திட்டம், 65 ஜிபி நிமிடங்களுடன் 5 ஜிபி டேட்டாவையும், ரூ.100 திட்டம் 1,362 ஐயூசி நிமிடங்களுடன் 10 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.
ரூ.100-க்கு கீழ் வோடபோன் ரீசார்ஜ் திட்டங்கள்
ஏர்டெல் போலல்லாமல் ரூ.100-க்கு கீழ் நிறைய ரீசார்ஜ் திட்டங்களை வோடஃபோன் வழங்குகிறது. இருப்பினும், அவற்றில் சில மட்டுமே சிறந்த நன்மைகளை வழங்குகின்றன.
உங்களுடைய தற்போதைய திட்டத்தின் அனைத்து டேட்டாவையும் நீங்கள் தீர்ந்துவிட்டால், ரூ.48 வோடபோன் திட்டத்தை வாங்கலாம் மற்றும் 3 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்குப் பெறலாம். நிறுவனத்தின் தொலைபேசி அல்லது வெப் பயன்பாடு வழியாக ரீசார்ஜ் செய்தால் 200MB கூடுதல் டேட்டாவையும் பெறுவீர்கள். ஜியோ சுமார் 30 நாட்களுக்கு 30 ஜிபி மொத்த தரவை வழங்குகிறது. ஆனால், இதற்காக நீங்கள் ரூ.100-க்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது ரூ.151 வரை ஆகும்.
வோடஃபோன் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது 12 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கும். தினசரி தரவு வரம்பை நீங்கள் தீர்ந்துவிட்டதால் உங்களுக்கு 1 ஜிபி தரவு தேவைப்பட்டால், ரூ.16 Vi திட்டம் சரியான சாய்சாக இருக்கலாம். இது 1 ஜிபி மொத்த டேட்டாவை 24 மணி நேரம் வழங்குகிறது மற்றும் Vi ஆப்பில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.
நீங்கள் ஒரு ஆல்ரவுண்டர் பேக்கைத் தேடுகிறீர்கள் என்றால், ரூ.79 அல்லது ரூ.49 திட்டங்களைப் பரிசீலிக்கலாம். ஆனால், இந்த வோடஃபோன் திட்டங்கள் யாவும் மிகக் குறைந்த மொபைல் டேட்டாவை வழங்குகின்றன.
ரூ.49 காம்போ ரீசார்ஜ் திட்டம் 28 நாட்களுக்கு 300 MB தரவையும், ரூ.38 டாக்டைமையும் தருகிறது. வினாடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
நிறுவனத்தின் ரூ.79 ரீசார்ஜ் திட்டம், 64 நாட்கள் செல்லுபடியாகும் 400 MB டேட்டா மற்றும் ரூ.64 டாக்டைம் அம்சங்களை வழங்குகிறது. மொபைல் அல்லது வெப் பயன்பாட்டுடன் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் 200MB தரவையும் இந்த திட்டம் வழங்கும்.
நீங்கள் இன்னும் கொஞ்சம் செலவு செய்தால், எல்லா நெட்வொர்க்குகளுக்கும் உண்மையிலேயே அன்லிமிடெட் உள்ளூர் / தேசிய அழைப்புகள், 1 ஜிபி டேட்டா மற்றும் 18 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதன் விலை ரூ.99.
ரூ.100-க்கு கீழ் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்
ஏர்டெல் தற்போது ரூ.100-க்கு கீழ் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது. ரூ.79 திட்டம், மொத்தம் 200 MB டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு டாக்டைமை வழங்குகிறது. ரூ.49 பேக், 28 நாட்கள் செல்லுபடியாகும் 100 MB டேட்டா மற்றும் டாக்டைமை வழங்குகிறது.
வெறும் மொபைல் டேட்டா திட்டத்தை வாங்க விரும்பினால், ரூ.19 பேக் உள்ளது. இது இரண்டு நாட்களுக்கு 200MB டேட்டா வழங்குகிறது. ரூ.48 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம் 3 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.100-க்கு கீழ் நல்ல ஆல்ரவுண்டர் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேட மாட்டார்கள். மேலும், சிறந்த நன்மைகளுக்காக, அதிக செலவு செய்ய வேண்டியதாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.