Jio Vs Airtel Vs Vodafone : ஒரு வருடத்திற்கான சிறந்த ப்ரீபெய்ட் ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது?

இந்த திட்டத்தின் கீழ் ஜியோ நிறுவனம் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

 Jio, Airtel, Vodafone prepaid plans under Rs 150
 Jio, Airtel, Vodafone prepaid plans under Rs 150

Jio, Airtel, Vodafone prepaid plans with one-year validity : ஏர்டெல், ஃவோடஃபோன் மற்றும் ஜியோ நிறுவனங்களில் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் எது என்பதை நாம் பல்வேறு தருணங்களில் பார்வையிட்டு வருகின்றோம். இருப்பினும் ஒரு ஆண்டுக்கான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் நிறுவனம் எது என்று அறிந்து கொள்வோம் இன்று.

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’கடை?

One year validity airtel prepaid packs

ஏர்டெல் நிறுவனம் ஒரு வருடம் வேலிடிட்டியுடன் இரண்டு பேக்குகளை வழங்குகிறது. ஒன்று ரூ. 1498க்கும், மற்றொன்று ரூ. 2398க்கும் ஆகும். சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Bharti Airtel Rs 1498 prepaid recharge pack

இந்த திட்டம் 4ஜி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மொத்த ஆண்டுக்கும் சேர்த்து 24ஜிபி மட்டுமே டேட்டா. அதிக நேரம் போனில் உரையாடவேண்டிய தேவை உள்ளவர்கள் இந்த ஆஃபரை பெறலாம். ஏன் என்றால் இது உண்மையாகவே அன்லிமிட்டட் கால்களை வழங்குகிறது. 3600 இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்ப இயலும். வின்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்ற ப்ரீமியம் பேக்குகளை பெற்றுக் கொள்ளலாம்.

 

Bharti Airtel Rs 2398 prepaid recharge plans

நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி என ஆண்டு முழுவதும் டேட்டாவை வாரி வழங்கும் திட்டத்தில் இதுவும் ஒன்றாகும். நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் கொள்ளலாம். வின்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்ற ப்ரீமியம் பேக்குகளை பெற்றுக் கொள்ளலாம்.

one year validity Vodafone-idea prepaid packs

ஏர்டெல் நிறுவனம் போன்றே வோடஃபோன் நிறுவனமும் இரண்டு வருடாந்திர ப்ளான்களை வழங்குகிறது.

Vodafone-Idea Rs 1499 prepaid recharge pack

ரூ. 1499க்கு வழங்கப்படும் இந்த திட்டத்தில் வருடம் முழுவதும் 24ஜிபி டேட்டாவை மட்டுமே வாடிக்கையாளர்கள் பெற இயலும். அன்லிமிட்ட்டட் கால்கள், 3600 இலவச எஸ்.எம்.எஸ்கள் ஆகியவை இந்த பேக்கில் வழங்கப்படும் அம்சங்களாகும். மேலும் வோடஃபோன் ப்ளே மற்றும் ஜீ5 சப்ஸ்கிரிப்சன்களை இலவசமாக வழங்குகிறது வோடஃபோன் நிறுவனம்.

Vodafone-Idea Rs 2399 prepaid recharge plan

நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி என ஆண்டு முழுவதும் டேட்டாவை தருகிறது இந்த பேக். அன்லிமிட்டட் கால்கள். நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் கொள்ளலாம். வோடஃபோன் ப்ளே மற்றும் ஜீ5 சப்ஸ்கிரிப்சன்களை இலவசமாக வழங்குகிறது வோடஃபோன் நிறுவனம்.

one year validity Reliance Jio prepaid packs

ஜியோ நிறுவனமும் இரண்டு வருடாந்திர திட்டங்களை வைத்துள்ளது. ரூ. 1299க்கான பேக்கில் 24ஜிபி டேட்டாவை வருடம் முழுவதும் வழங்குகிறது. மேலும் 3600 இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் கொள்ள இயலும். அன்லிமிட்டட் கால்களை ஜியோ நெட்வொர்க்கிலும், இதர நெட்வொர்க் கால்களுக்கு 12000 இலவச நிமிடங்களையும் வழங்குகிறது ஜியோ.

Reliance Jio Rs 2199 prepaid recharge plan

இந்த திட்டத்தின் கீழ் ஜியோ நிறுவனம் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும் அன்லிமிட்டட் கால்களை ஜியோ நெட்வொர்க்கிலும், இதர நெட்வொர்க் கால்களுக்கு 12000 இலவச நிமிடங்களையும் வழங்குகிறது ஜியோ. நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ்களை அனுப்பிக் கொள்ள இயலும்.

Reliance JIO Wi-Fi Calling

Reliance Jio 2020 Happy New Year Offer

இந்த புதுவருடத்தை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட ஸ்பெசல் பேக் இதுவாகும்.  இந்த திட்டத்தின் கீழ் ஜியோ நிறுவனம் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும் அன்லிமிட்டட் கால்களை ஜியோ நெட்வொர்க்கிலும், இதர நெட்வொர்க் கால்களுக்கு 12000 இலவச நிமிடங்களையும் வழங்குகிறது ஜியோ. நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ்களை அனுப்பிக் கொள்ள இயலும். ரூ. 2020க்கு வழங்கப்படும் இந்த பேக், ரூ. 2199 பேக்கின் திருத்தப்பட்ட பேக் இது என்பது  கூடுதல் தகவல்.

மேலும் படிக்க : எப்போது வெளியாகும் வாட்ஸ்ஆப் டார்க் மோட்?

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jio airtel vodafone prepaid plans one year validity

Next Story
வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்தது; பயனாளர்கள் மகிழ்ச்சிwhatsapp back online, whatsapp working again, வாட்ஸ் அப், புகைப்படம் வீடியோ அனுப்புவதில் சிக்கல், வாட்ஸ் அப்பில் சிக்கல், whatsapp down, whatsapp not working, whatsapp out, whatsapp photo send fail, whatsapp problem
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com