ரூ. 150க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள்… பட்ஜெட் போடும் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். 300 இலவச எஸ்.எம்.எஸ்கள், 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்களை இது வழங்குகிறது

 Jio, Airtel, Vodafone prepaid plans under Rs 150
 Jio, Airtel, Vodafone prepaid plans under Rs 150

Jio, Airtel, Vodafone prepaid plans under Rs 150 : இந்தியாவில் மிகவும் சிறப்பாக போட்டிக் கொண்டு செயல்படும் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரு பார்வை.

Reliance Jio Latest News

ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 49 மற்றும் ரூ. 69க்கு கிடைக்கும் இந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி வெறும் 14 நாட்கள் மட்டுமே. மேலும் ஜியோ போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் ச்செய்ய முடியும். மற்ற ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்கள் கிடையாது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இதர திட்டங்கள் கீழே

Reliance Jio Rs 129 prepaid pack

ரூ. 129க்கு கிடைக்கும் இந்த திட்டத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ – 2 – ஜியோ கால்களை அன்லிமிட்டடில் பேசிக் கொள்ளலாம்.  ஜியோவில் இருந்து மற்ற நிறுவனங்களுக்கு பேச 1000 இலவச நிமிடங்களும் வழங்கப்படுகிறது. 2ஜிபி டேட்டா, மொத்தமாக 300 இலவச எஸ்.எம்.எஸ்கள் மற்றும் ஜியோ அப்களை 28 நாட்கள் வேலிடிட்டிக்கு வழங்குகிறது இந்த பேக்.

மேலும் படிக்க : ரிலையன்ஸ் ஜியோ ‘பிரீ பெய்டு’ சலுகை திடீர் குறைப்பு- 4 மாதங்களில் இப்படியொரு அதிர்ச்சியா?

Reliance Jio Rs 149 prepaid pack

இந்த திட்டத்தின் கீழ் தினசரி டேட்டா பலன்களை வாடிக்கையாளர்கள் பெற்றிட இயலும். 24 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பேக்கில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்காள் பயன்படுத்திக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களும் அனுப்ப இயலும். அதே நேரத்தில் ஆன் நெட் கால்கள் முற்றிலும் இலவசம். மற்ற நெட்வொர்க்குடன் பேச 300 இலவச நிமிடங்களை மட்டுமே வழங்குகிறது ஜியோ.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Vodafone-Idea Rs 99 prepaid pack

இந்த பேக் 18 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச அன்லிமிட்டட் கால்களை வழங்கி அசத்துகிறது. 1ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ்களை மொத்த 18 நாட்களுக்கும் சேர்த்து வழங்குகிறது இந்த பேக். முழுக்க முழுக்க போன் கால் பயன்பாட்டிற்கான பேக் இது. இதில் வோடஃபோன் ப்ளே மற்றும் ஜீ5 சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Vodafone-Idea Rs 149 prepaid pack

இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். அன்லிமிட்டட் கால்கள், 300 இலவச எஸ்.எம்.எஸ்கள் மற்றும் 2ஜிபி டேட்டாவை இந்த வேலிடிட்டி காலத்தின் போது வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : 6 கேமராக்களுடன் வெளியாகிறது ரியல்மீ X50 ப்ரோ ஸ்மார்ட்போன்!

Airtel’s Rs 48 and Rs 98 data packs

ஏர்டெல் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. மிகவும் குறைவான விலையில் ரூ.48 மற்றும் ரூ. 98க்கான திட்டங்களை அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம். ரூ. 48க்கான திட்டத்தில் 3ஜிபி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி. ரூ. 98க்கான திட்டத்தில் 6 ஜிபி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி. ஆனால் இந்த இரண்டு பேக்கிலும் கால்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்கள் வசதி இல்லை.

Airtel Rs 99 prepaid plan

100 இலவச எஸ்.எம்.எஸ்கள், 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்களை வழங்குகிறது இந்த பேக். மேலும் இதன் வேலிடிட்டி 18 நாட்கள் மட்டுமே. இத்துடன் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் மற்றும் விங்க் மியூசிக் ஆப்பின் சப்ஸ்கிரிப்சன்கள் நமக்கு கிடைக்கிறது.

Airtel Rs 129 prepaid plan

இதன் வேலிடிட்டி 24 நாட்களாகும். 300 இலவச எஸ்.எம்.எஸ்கள், 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்களை இது வழங்குகிறது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் மற்றும் விங்க் மியூசிக் ஆப்பின் சப்ஸ்கிரிப்சன்கள் நமக்கு இந்த வேலிடிட்டியில் இலவசமாக கிடைக்கிறது.

Airtel Rs 149 prepaid plan

இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். 300 இலவச எஸ்.எம்.எஸ்கள், 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்களை இது வழங்குகிறது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் மற்றும் விங்க் மியூசிக் ஆப்பின் சப்ஸ்கிரிப்சன்கள் நமக்கு இந்த வேலிடிட்டியில் இலவசமாக கிடைக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jio airtel vodafone prepaid plans under rs 150

Next Story
ரியல்மியின் புதிய ”கேட்ஜெட்”… நம் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யும் நிறுவனம்!Realme fitness band coming on March 5
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com