இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Antique Stock Broking இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. 15 முதல் 17 சதவீதம் வரை விலை உயரக் கூடும் என்று கூறுகிறது.
பார்தி ஏர்டெல்லின் சராசரி வருவாய் ஒரு பயனருக்கு (ARPU) தற்போதைய ரூ.208-ல் இருந்து 286 நிதியாண்டின் இறுதிக்குள் ரூ.286 ஆக உயரும் என்று கணித்துள்ளது. கட்டண உயர்வுகள், 2ஜி வாடிக்கையாளர்களை 4ஜிக்கு மாற்றுவது மற்றும் 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டிலும் அதிக டேட்டா திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களின் இடம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்த விலை அதிகரிப்பு செய்யப்படும் என்று Antique Stock Broking கூறியுள்ளது. கடந்த 5.5 ஆண்டுகளில், பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை வோடபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகியவற்றின் இழப்பில் இருந்து தொடர்ந்து சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“