Advertisment

365 நாட்கள் வேலிடிட்டி, அமேசான் ப்ரைம் இலவசம்: ஜியோ புதிய வருடாந்திர திட்டம் அறிமுகம்

அமேசான் ப்ரைம் வீடியோ சந்தா உடன் ரிலையன்ஸ் ஜியோ புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Reliance Jio

ரிலையன்ஸ் ஜியோ முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும் 365 நாட்கள் ரீசார்ஜ் திட்டத்தில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

Advertisment

அதாவது, அமேசான் ப்ரைம்  வீடியோ மொபைல் சந்தா உடன் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட  ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ரூ.3,227க்கு வழங்கப்படுகிறது. 

இந்த புதிய திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா,  1 வருடத்திற்கு மொத்தம் 730ஜிபி டேட்டா. அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் JioCloud, JioTV மற்றும் இலவச JioCinema ஆகியவற்றிற்கான இலவச அணுகலை வழங்குகிறது. 

மேலும் ஜியோ இதேபோன்று பிற வருடாந்திர திட்டங்களையும் கொண்டுள்ளது. டேட்டா மற்றும் ஓ.டி.டி வசதிகளில் மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. 

Sony Liv, Zee5 மற்றும் Disney+Hotstar மெம்பர்ஷிப்பில் ஆர்வமுள்ளவர்கள் முறையே ரூ.3,226, ரூ.3,225 மற்றும் ரூ.3,178 திட்டங்களைப் பெறலாம். இது புதிய பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் திட்டத்தைப் போன்ற பலன்களை வழங்குகிறது.

மற்றொரு திட்டத்தில்  Zee5 மற்றும் Sony Liv இரண்டும் பெற விரும்பினால், ரூ.3,662 திட்டத்தைப் பெறலாம்.  ஒரு வருட வேலிடிட்டியுடன் வருகிறது, ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது.

மேலும் சற்று விலை குறைவான வருடாந்திர திட்டம் ரூ.2,545 திட்டமானது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. ஆனால் இந்த திட்டம் 336 நாட்கள் மட்டும் வேலிடிட்டி கொண்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Recharge Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment