15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. முதன்முறையாக 10 அணிகள் களமிறங்கவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கிரிக்கெட் பிரியர்களுக்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பல சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வீசியுள்ளது.
ரீசார்ஜ் திட்டங்கள்
ஜியோ பயனர்கள் தினமும் 2ஜிபி டேட்டா பெறும் வகையில் 4 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 28 நாள்களுக்கு ரூ499 திட்டமும், 56 நாள்களுக்கு ரூ799 திட்டமும், 84 நாள்களுக்கு ரூ1066 திட்டமும், 365 நாள்களுக்கு ரூ3119 திட்டமும் ஆகும்.
இதுதவிர, ஆண்டுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா பெறும் வகையில் புதிதாக 2,990 ரூபாய்க்கு ஆஃபர் திட்டமும் உள்ளது. 28 நாள்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா பெற 601ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்திட வேண்டும்.
மேலும், 2 Data Add on பேக்-வும் கிடைக்கிறது. 555 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 55 நாள்கள் வேலிடிட்டியில் 55 ஜிபி மொத்தமாக கிடைக்கும். அதேபோல், 659ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 1.5 ஜிபி டேட்டா 56 நாள்களுக்கு கிடைக்கக்கூடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஐபிஎல் மேட்ச்களை காணும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா அடங்கிய ரீசார்ஜ் திட்டங்களும் வழங்கப்படுகிறது.
ரூ1499 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாள்கள் ஆகும். அதே சமயம், 365 நாள்கள் செலுப்படியாகும் ரூ4199 திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களிலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலில் இலவசமாக கிரிக்கெட் மேட்ச்களை பார்த்துக்கொள்ளலாம்.
JioFiber, Jio Cricket Play
JioFiber வாடிக்கையாளர்கள், 999ரூபாய் திட்டத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலி மூலம் அனைத்து கிரிக்கெட் மேட்களையும் இலவசமாக காணலாம்.
அதே போல், ஜியோ கிரிக்கெட் ப்ளே அலாங் (JCPA)-இல் பங்கேற்கும் பயனர்களுக்கு வெகுமதி வழங்கும் அம்சம் மீண்டும் வந்துள்ளது. இந்த கேம்-மை இலவசமாக விளையாடலாம். சாட்களின் போது எமோஜி அனுப்பி விளையாடிக்கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil