ஜியோ சமீபத்தில் குறைந்த விலை மற்றும் 4ஜி செயல்திறன் கொண்ட ஜியோபுக் 11 என்ற லேப்டாப்-ஐ அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து மற்றொரு பட்ஜெட் விலை லேப்டாப்-பை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது ஒரு "கிளவுட்" லேப்டாப் என்று கூறப்படுகிறது.
இந்த லேப்டாப் கிளவுட் கம்ப்யூட்டிங்கின் பயன்படுத்துவதற்கு குறைந்த தாமதத்துடன், ஆக்டிவ் இணைய இணைப்பு தேவை. இந்த சமயத்தில் ஜியோ கிளவுட் சேவை வழங்குநராக இருக்கும், இது சேமிப்பு மற்றும் செயலாக்க சக்தி இரண்டையும் வழங்குகிறது. நிறுவனம் HP Chromebook-ல் அதன் சோதனைப் பதிப்பை இயக்குகிறது.
ஹார்டுவேரில் பணம் செலவழிக்க விரும்பாதவர்களுக்கு, ஜியோ கிளவுட் சேவை வழங்கப்படுகிறது. இது டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற பெரும்பாலான சாதனங்களிலிருந்தும் அணுக முடியும். இந்த சேவை மாதாந்திர சந்தா மாதிரியுடன் வரும், இது விரைவில் இறுதி செய்யப்படும்.
ஜியோவின் முதல் லேப்டாப் JioBook 11, JioOS-ல் இயங்குகிறது. இந்த லேப்டாப் அமேசானில் ரூ.14,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜியோ கிளவுட் லேப்டாப் உலகின் மிகவும் பிரபலமான கணினி இயக்க முறைமையான விண்டோஸ் உட்பட பல விருப்பங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளவுட் லேப்டாப்பின் நன்மைகள்
கிளவுட் கம்ப்யூட்டிங் கொண்ட ஒரு லேப்டாப் அப்ப்ரண்ட் தொகையை வெகுவாகக் குறைக்கும், இது இந்தியாவில் சுமார் ரூ.50,000 என்று கூறப்படுகிறது. அதற்கு மேல், பயனர்கள் வன்பொருளை மேம்படுத்தாமல், தேவைக்கேற்ப செயல்திறனைத் தேர்வு செய்யலாம். இது வழக்கமான கணினியுடன் ஒப்பிடும் போது கிளவுட் கம்ப்யூட்டிங் இயங்குதளத்தை அதிக அளவில் செயல்திறன் கொண்டதாக இருக்கும்.
இருப்பினும், இவை அனைத்திற்கும் அதிவேக குறைந்த தாமத இணைய அணுகல் தேவைப்படுகிறது. ஜியோ கிளவுட் கம்ப்யூட்டர் சந்தாவுடன் டேட்டா திட்டங்களை சேர்க்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“