/tamil-ie/media/media_files/uploads/2018/11/CAR-10.jpg)
JioPhone diwali dhamaka
தீபாவளி பண்டிகையொட்டி ஜியோ நிறுவனம் JioPhone diwali dhamaka ஆஃபரின் கீழ் ஜியோ போன் 2 சேலை நவம்பர் 5 ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது.
JioPhone diwali dhamaka : ஜியோ போன் 2 சேல் ஆரம்பம்!
மும்பையில் நடைப்பெற்ற 41 ஆவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ ஃபோன் 2 அறிமுகப்படுத்தப்பட்டது.3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரிலையன்ஸ் கூட்டத்தில் தான் முதன்முறையாக ஜியோ சேவை அறிமுகமானது.
ஜியோவின் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக பரவி இன்று ஜியோ சேவை டெலிகாம் மார்க்கெட், மொபைல் சேவை, இணைய சேவை என அனைத்திலும் தனி சாம்ராஜ்ஜியத்தையே தனகென அமைத்துள்ளது.
41 ஆவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃபோன் 2 குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்தது. முதன்முறையாக வெறும் 1,500 ரூபாய்க்கு ஜியோ ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஜியோ போன் 2 வின் விலை ரூ, 2999 விலை என்று தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஜியோ போன் 2 வின் சேல், முன்பதிவு ஆகியவை Jio.com தளத்தில் நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு JioPhone diwali dhamaka ஆஃபரின் கீழ் ஜியோ போன் 2 சேலை நவம்பர் 5 ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது.
"JioPhone diwali dhamaka" ஆஃப்பரின் படி ஜியோ நிறுவனம் ஜியோபோன்-ஐ ரூ.1095 வழங்குகிறது. அதில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா வசதிகள் 6 மாதத்திற்கு இலவசம்.
இந்த ஆஃபர் நவம்பர் 5 மதியம் 12 மணி முதல் நவம்பர் 12 வரை மட்டுமே. மேலும் ஜியோ போன் 2 வை பேடிஎம் மூலம் வாங்கினால் 200 ரூபாய் கேஷ்பாக் கிடைக்கும் என்றும் ஜியோ அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.