ஜியோவின் டபுள் டமாக்கா ஆஃப்ர்

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றிற்கு 1.5ஜிபி கூடுதல் டேட்டாவினை வழங்க முடிவு செய்திருக்கின்றது. இந்த ஆஃபர் ஜூன் 12ம் தேதி தொடங்கி, வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30 வரை...

ஜியோ நேற்று டபுள் டமாக்கா ஆஃப்ரினை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கின்றது. அதன்படி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றிற்கு 1.5 ஜிபி கூடுதல் டேட்டாவினை வழங்க முடிவு செய்திருக்கின்றது. இந்த ஆஃபர் ஜூன் 12ம் தேதி தொடங்கி, வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30 வரை இருக்கும்.

இந்த டபுள் டமாக்கா ஆஃப்ரினைத் தொடர்ந்து, ஜியோ தன்னுடைய புதிய ஆஃப்ரினையும் அறிமுகப்படுத்துகின்றது. 499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மூன்று மாத வேலிடிட்டி மற்றும் 3.5 ஜிபி வரை டேட்டாவினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

டபுள் டமாக்கா ஆஃப்ரின் மூலம், ஜூன் 30 தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் கூடுதலாக 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது ஏற்கனவே ரூ.149, ரூ. 349, ரூ.399, மற்றும் ரூ.449ற்கு ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களால் ஏற்கனவே நாளொன்றிற்கு 1.5ஜிபி டேட்டாவினை உபயோகித்து வருகின்றார்கள். இந்த ஆஃப்ரின் மூலம் அவர்கள் நாளொன்றிற்கு 3ஜிபி டேட்டாவினை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ரூ. 198, ரூ. 398, ரூ.448, மற்றும் ரூ. 498 மதிப்புள்ள ரீசார்ஜ் சலுகைகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் 2ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 1.5ஜிபி டேட்டாவினை பெறுவார்கள். ரூ. 299 ( நாளொன்றிற்கு 3ஜிபி டேட்டா), ரூ. 509 ( நாளொன்றிற்கு 4ஜிபி டேட்டா), ரூ. 799 ( நாளொன்றிற்கு 5ஜிபி டேட்டா) ஆகிய பேக்குகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும் கூடுதலாக நாளொன்றிற்கு 1.5ஜிபி டேட்டாவினை எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பேக்குகளின் வேலிடிட்டியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எப்போதும் போல் 64kbps வேகம், இலவச அழைப்புகள், 100 இலவச குறுஞ்செய்தி அனுப்பும் வசதி என்று எந்த மாற்றமுமின்றி அப்படியே தொடரும். ரூ.499ற்கான ரீசார்ஜின் வேலிடிட்டி 91 நாட்களாகும். நாளொன்றிற்கு 3.5 ஜிபி ட்டாவினை உபயோகித்துக் கொள்ளலாம். கடந்த டிசம்பர் மாதம் ஏற்கனவே இந்த ஆஃப்ரினை அறிமுகப்படுத்தி இருந்தது ஜியோ. சிறிது நேரத்தில் அதன் விலை ரூபாய். 449ற்கு மாற்றப்பட்டதால் ரூ. 499 சலுகையினை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கின்றது ஜியோ.

கடந்த முறை ஜியோ பேக்குகளை வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட ரூபாய் 50ற்கான கூப்பனை இம்முறை பயன்படுத்தலாம். மேலும் ரூ 300க்கு மேல், ஜியோ செயலினைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 100 தள்ளுபடியும் அளிக்கின்றது ஜியோ. ரூ.300க்கு கீழ் ரீசார்ஜ் செய்தால் 20% சலுகை அளிக்கப்படுகின்றது.

×Close
×Close