Advertisment

ஜியோ அசத்தல்; இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிப்பு: ஓ.டி.டி ஆப்ஷன்களுடன் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்

ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் டேட்டாவை விட நீண்ட வேலிடிட்டி வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன.

author-image
WebDesk
New Update
Reliance Jio

ஜியோ தனது மிகவும் பிரபலமான மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது மற்றும் ஓ.டி.டி நன்மைகளுடன் பல்வேறு புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் அதன் ரூ.349 மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தில்  மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதாவது அதன் வேலிடிட்டியை 28 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரித்துள்ளது. அதேபோல், ரூ.999 விலையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது 98 நாட்கள் செல்லுபடியாகும்.

Advertisment

ஜியோவின் ரூ.349 திட்டம் 

ஜியோவின் ரூ.349 திட்டம், 5ஜி நெட்வொர்க்கிற்கான அணுகலை வழங்கும் குறைந்த விலை திட்டமாகும். சமீபத்திய அப்டேட் உடன், இது இப்போது 2 ஜிபி 4ஜி டேட்டாவை 30 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதியுடன் வழங்குகிறது. 

புதிய திட்டங்கள் 

ஜியோவின் சமீபத்திய ரூ. 999 முற்றிலும் புதிய திட்டம் அல்ல. இது ரூ.1,199 திட்டத்திற்கு மாற்றாக வருகிறது, இது ஒரு நாளைக்கு 3 ஜிபி 4ஜி டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. 

அதேசமயம் புதிய ரூ.999 திட்டம் மலிவானது மட்டுமல்ல, இது 14 கூடுதல் நாட்கள் வேலிடிட்டியையும் வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இதேபோல், ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய ரூ.949 திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டா, 5ஜி அணுகல் மற்றும் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவையும் கொண்டுள்ளது. 

மேலும், புதிய ரூ.1,049 திட்டம் , 2 ஜிபி 4ஜி மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் இலவச சோனிலிவ் மற்றும் ஜீ5 சந்தாக்களை வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில பெற  https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment