30 நாள் இலவச ஜியோ நெட்வொர்க்: செம்ம ஆஃபர்களுடன் ரூ399 முதல் புதிய ப்ளான்கள்!

Jio work from home pack: மைஜியோ ஆப்பில் வவுச்சர் வடிவில் 30 நாள் இலவச சோதனை பயன் வழங்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

By: September 2, 2020, 9:19:23 AM

Jio fiber tamil news, jio work from home pack: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியாவில் ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், தங்களது வாடிக்கையாளர்களுக்கு உண்மையான அன்லிமிடெட் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக, வீட்டில் இருந்து பணிபுரிபவர்கள், இணையதள சேவை குறைபாடு காரணமாக அவதிப்படும் இந்த நேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த அரிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய திட்டத்தின்படி, ரூ.399 கட்டணத்தில் சேவைகள் துவங்குகின்றன.

புதிய ஜியோ பைபர் திட்டத்தின் படி அளவில்லா இன்டர்நெட், அதிக வேகம் கிடைப்பதோடு மட்டுமல்லாது, ஓடிடி செயலிகள் ( குறிப்பிட்ட திட்டங்களில்) கிடைக்கிறது. புதிய இணைப்பை பெற, வாடிக்கையாளர்கள் திரும்பப்பெறத்தக்க குறிப்பிட்ட தொகை ஒன்றை செலுத்த வேண்டும்.
ரூ.399 கட்டணத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அளவில்லா இன்டர்நெட் வசதியை பெறமுடியும். இதனுடன் அளவில்லா குரல் அழைப்புகளும் உண்டு, ஆனால் ஓடிடி செயலிகள் சேவை இதில் இல்லை.

jio work from home pack: ஜியோ ஃபைபர் இலவசம் ஆஃபர்

ரூ.699 கட்டணத்திலான திட்டத்தில், அளவில்லா இன்டர்நெட், 100 எம்பிபிஎஸ் வேகம், அளவில்லா குரல் அழைப்புகளும் உண்டு, ஆனால் ஓடிடி செயலிகள் சேவை இதில் இல்லை.

ரூ.699 கட்டணத்திலான திட்டத்தில், 150 எம்பிபிஎஸ் வேகத்தில் அளவில்லா இன்டர்நெட், அளவில்லா குரல் அழைப்புகளும் உண்டு 11 ஓடிடி செயலிகள் வசதி தரப்படுகின்றன.

ரூ.1,499 கட்டணத்திலான திட்டத்தில், 300 எம்பிபிஎஸ் வேகத்தில் அளவில்லா இன்டர்நெட், அளவில்லா குரல் அழைப்புகளும் உண்டு 12 ஓடிடி செயலிகள் வசதி தரப்படுகின்றன.

ஜியோடிவி பிளஸ் செயலி உதவியுடன், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி, ஜியோ சினிமா, ஜீ5, சோனி லைவ், வூ, ஆல்ட்பாலாஜி, சன்நெக்ஸ்ட், லயன்ஸ்கேட் பிளே, ஷீமாரோ, ஹோய்சோய் உள்ளிட்ட ஓடிடி செயலிகள் உள்ளன.

ஜியோ பைபர் செட் டாப் பாக்ஸிலேயே, ஓடிடி கன்டென்ட்களை ஆன்லைனிலேயே பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செட் டாப் பாக்ஸ், குரல் மூலமாக செயல்படும் ரிமோட் உள்ளது. ஜியோ கேம்ஸ், ஜியோசாவ்ன் உள்ளிட்ட வசதிகளும் இதில் வழங்கப்படுகின்றன.

ஜியோ நிறுவனம், சோதனை முயற்சியாக 30 நாட்கள் வேலிடிட்டியிலான டிரையல் பேக்கை தருகிறது. இந்த காலத்தில், 150 எம்பிபிஎஸ் வேகத்தில் அளவில்லா இன்டர்நெட் சேவை, 10 ஓடிடி செயலிகள் பயன்கள் வழங்கப்படுகின்றன. அளவில்லா குரல் அழைப்புகளும் உண்டு. செக்யூரிட்டி தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தும்பட்சத்தில் அவர்களுக்கு செட் டாப் பாக்ஸ் மற்றும் ஜியோ பைபர் மோடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 30 நாட்கள் டிரையல் பேக், செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை தங்கள் இணைப்புகளை செயல்படுத்திய அனைத்து ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கும் மைஜியோ ஆப்பில் வவுச்சர் வடிவில் 30 நாள் இலவச சோதனை பயன் வழங்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜியோவுடனான மொபைல் இணைப்பில் இந்தியாவை மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக மாற்றிய பின்னர், ஜியோ பைபர் இந்தியாவை உலகளாவிய பிராட்பேண்ட் தலைமைக்கு கொண்டு செல்லும், இதன் மூலம் 1,600 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு பிராட்பேண்ட் சேவை கிடைக்கும்” என்று ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குனர் ஆகாஷ் அம்பானி கூறி உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Jio fiber reliance jio broadband plans unlimted internet ott subscription reliance broadband plans

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X