ஜியோ போஸ்ட்பெய்டு பேஸிக் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ.100 உயர்ர்தி உள்ளது. ஜனவரி 23 முதல் இது அமலுக்கு வரும் எனவும் கூறியுள்ளது. ஜியோ கடந்தாண்டு விலை உயர்வை அறிவித்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.100 அதிகரிக்கப்பட்டுள்ளது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘
அதாவது ரூ.199 திட்டம் இனி ரூ.299 ஆகும். ஜனவரி 23 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று BT இன் அறிக்கை தெரிவிக்கிறது. மாதாந்திர திட்டமானது அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் 25 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது.
கூடுதலாக, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் இலவச தேசிய ரோமிங்கை பெறாலாம். திடீர் விலை உயர்வு பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.