scorecardresearch

ஒரு ரீசார்ஜ்..ரூ.3000 மதிப்பிலான சலுகைகள்: ஜியோ சுதந்திர தின சூப்பர் ஆஃபர்!

ஜியோ சுதந்திர தின விழா ஆஃபர் விவரம் வெளிடப்பட்டுள்ளது. 365 நாட்கள் முழு வேலிடிட்டியுடன், கூடுதல் சலுகைகளுடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு ரீசார்ஜ்..ரூ.3000 மதிப்பிலான சலுகைகள்: ஜியோ சுதந்திர தின சூப்பர் ஆஃபர்!

இந்தியாவில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, தொலைத்தொடர்பு சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. 4ஜி டேட்டா சேவை வழங்கி வந்த நிலையில், தற்போது அடுத்தகட்டமாக 5ஜி சேவை வழங்கவும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்களுக்கு சேவை வழங்க உள்ளது.

இந்நிலையில், ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின ஆஃபர் அறிமுகப்படுத்தியுள்ளது. பீரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் முழு வேலிடிட்டியுடன், கூடுதல் சலுகைகளுடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் ரூ.2999-க்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 2.5GBடேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால், 1 வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, மற்ற ஜியோ சேவைகள் ஜியோ டிவி, ஜியோ சினிமா ஆகியவை 365 நாட்கள் முழு வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதனுடன் கூடுதலாக ரூ.3000 மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. 4 வகையான சலுகைகள் கிடைக்கிறது.

  1. ரூ.750 மதிப்பிலான 75GB கூடுதல் டேட்டா இலவசம்
  2. ரூ.750 மதிப்பிலான Ajio ஆஃபர்
  3. ரூ.750 மதிப்பிலான Netmeds ஆஃபர்
  4. ரூ.750 மதிப்பிலான Ixigo ஆஃபர் வழங்கப்படுகிறது.

அதாவது, ரூ.2999க்கு ஜியோ சுதந்திர தின பீரிபெய்ட் ரீசார்ஜ் செய்தால், ரூ.3000 மதிப்பிலான கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறது.

ஜியோ சுதந்திர தின ஆஃபர் திட்டம்: ரீசார்ஜ் செய்வது எப்படி?

365 நாட்களுக்கான இந்த சுதந்திர தின ஆஃபர் திட்டத்தை ஜியோ வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். எளிமையாக MyJio app வழியாக வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதற்கு முதலில் MyJio செயலியில் உங்க ஜியோ நம்பர் மூலமாக லாகின் செய்ய வேண்டும். ரீசார்ஜ் பகுதிக்கு சென்று, ரூ.2999 சுதந்திர தின திட்டம் பற்றி பார்த்து, பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

அல்லது, வாடிக்கையாளர்கள் யூபிஐ (UPI apps) செயலிகள் மூலமாக ரீசார்ஜ் செய்யலாம். யூபிஐ செயலிகளில் மொபைல் ரீசார்ஜ் வசதி இருந்தால் அதில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Jio independence day plan offers 2 5gb daily data for 365 days check price details