ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு 20% கேஷ்பேக்!

Jio is offering 20 percent cashback on prepaid plans Tamil News ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 தினசரி எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.

Jio is offering 20 percent cashback on prepaid plans Tamil News
Jio is offering 20 percent cashback on prepaid plans Tamil News

Jio is offering 20 percent cashback on prepaid plans Tamil News : ரிலையன்ஸ் ஜியோ சில ப்ரீபெய்ட் திட்டங்களில் புதிய கேஷ்பேக் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மூன்று பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு 20 சதவிகிதம் கேஷ்பேக் தருகிறது. இதனை மைஜியோ ஆப் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் வழியாகப் பெறலாம்.

பட்டியலின்படி, கேஷ்பேக் சலுகை ரூ.249, ரூ.555 மற்றும் ரூ.599 ஆகிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் கிடைக்கும். இந்தத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றை வாங்கிய பிறகு, கேஷ்பேக் பயனாளியின் கணக்கில் வைக்கப்படும் என்று தொலைத்தொடர்பு ஆபரேட்டர் தெரிவித்துள்ளது. இது எதிர்கால ப்ரீபெய்ட் கட்டணத்தில் பயன்படுத்த முடியும்.

ரூ.249 ஜியோ ப்ரீபெய்ட் திட்டம், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. மேலும், தினசரி 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். டேட்டா தீர்ந்துவிட்டால், நீங்கள் 64Kbps வேகத்தைப் பெறுவீர்கள். இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.

ஜியோவில் இருந்து ரூ.555 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வாங்குவோருக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதனை நீங்கள் வாங்கிய பிறகு, 84 நாட்களுக்கு இந்தத் திட்டம் செல்லுபடியாகும்.

கடைசியாக, ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 தினசரி எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இது 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் சந்தாக்களுக்கு இலவச அணுகலை வழங்குகின்றன.

இந்த 20 சதவீத கேஷ்பேக் சலுகை எப்போது காலாவதியாகும் என்பது தற்போது தெரியவில்லை. வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் ஆப் அல்லது தளம் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த சலுகையின் பலன் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Jio is offering 20 percent cashback on prepaid plans tamil news

Exit mobile version