ரிலையன்ஸ் ஜியோ ஒரு புதிய ஆட்-ஆன் டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.49-க்கு அதிகப்படியாக 25 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. எனினும் இதன் வேலிடிட்டி ஒரு நாள் அதாவது 24 மணி நேரம் மட்டும் தான்.
இது தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிக்காக பிரத்யேக கிரிக்கெட் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா ஐ.பி.எல் 2024-ஐ தங்கள் ஸ்மார்ட் போன்களில் ஸ்ட்ரீம் செய்ய விரும்பும் பயனர்களுக்கு வழங்க புதிய திட்டம் "கிரிக்கெட் திட்டமாக" இந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஏர்டெல்லும் இதே விலையில் ரூ. 49 விலையில் இதே போன்ற திட்டத்தை வழங்குகிறது. ஏர்டெல் ஒரு நாள் வேலிடிட்டியுடன் 20 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. வி.ஐ-ல் இதேபோன்ற திட்டம் உள்ளது, அதன் விலையும் ரூ. 49 ஆகும். இருப்பினும், வி.ஐ 6 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்குவதை விட இது கணிசமாகக் குறைவாகும். எனினும், இது டேட்டா திட்டம் மட்டுமே. காலிங் வசதியோ, எஸ்.எம்.எஸ் வசதியோ கிடையாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“