Advertisment

குறைந்த விலை, நிறைய பலன்கள்: 2 புதிய டேட்டா பூஸ்டர் திட்டங்களை அறிமுகப்படுத்திய ஜியோ

ஜியோ ரூ.19, ரூ.29 விலையில் 2 புதிய டேட்டா பூஸ்டர் திட்டங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Reliance Jio

Reliance Jio

ஜியோ இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மொபைல் டேட்டா, வைஃபை, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. ஜியோ ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. ப்ரிபெய்ட், போஸ்பெய்ட் என சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக அன்லிமிடெட் சேவைகளை வழங்குகிறது.

Advertisment

இந்த நிலையில், ஜியோ ரூ.19, ரூ.29 விலையில் 2 புதிய டேட்டா பூஸ்டர் திட்டங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டேட்டா பூஸ்டர் திட்டங்கள் 1.5ஜிபி மற்றும் 2.5ஜிபி வகைகளில் கிடைக்கின்றன. ரூ.19 திட்டத்தில் 1.5ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.29 திட்டத்தில் 2.5ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. டேட்டா பூஸ்டர் திட்டங்களை ஜியோ பயனர்கள் MyJio ஆப் அல்லது ஜியோ இணையதளம் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.

உங்களுடைய அன்லிமிடெட் திட்ட வேலிடிட்டி முடியும் வரை இந்த டேட்டா பூஸ்டர் திட்டம் செல்லுபடியாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Jio Recharge Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment