Advertisment

இந்த நாடுகளுக்கு குறைந்த விலை; ஜியோ புதிய ரோமிங் திட்டங்கள் அறிமுகம்

ஜியோ நாடு சார்ந்த புதிய சர்வதேச ரோமிங் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Reliance Jio.jpg

ஜியோவின் புதிய சர்வதேச திட்டங்கள் டேட்டா மற்றும் காலிங் வசதி உடன் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டியை வழங்குகின்றன. 

Advertisment

டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் காலிங் வசதியுடன் ஏழு நாட்கள் முதல் 30 நாட்கள் வரை செல்லுபடியாகும் பல்வேறு நன்மைகளுடன், ஜியோ பல புதிய நாடு சார்ந்த சர்வதேச ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டங்கள் 7, 14 அல்லது 30 நாட்கள் வேலிடிட்டி உடன் மூன்று வெவ்வேறு வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்தத் திட்டங்களின் விலை வெவ்வேறு டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு பலன்களுடன் நாட்டிற்கு நாடு மாறுபடும்.

தாய்லாந்திற்குச் செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு, ஜியோ இப்போது இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது, இதன் அடிப்படைத் திட்டமான ரூ. 1551-ல் 6 ஜிபி டேட்டா, 200 நிமிட அழைப்பு மற்றும் 50 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 14 நாட்கள் செல்லுபடியாகும்.

நீண்ட காலம் தங்கத் திட்டமிடுபவர்களுக்கு, ஜியோ ரூ.2851க்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தைக் கொண்டுள்ளது, இது 12 ஜிபி டேட்டா, 300 நிமிட அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. 

ஜியோ கனடாவிற்கும் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 14 நாட்கள் செல்லுபடியாகும் அடிப்படைத் திட்டம் ரூ. 1,691 ஆகும். இதே போல் 30 நாட்கள் வேலிடிட்டியிலும் திட்டம் வழங்குகிறது. 

1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் 200 நிமிட அழைப்புகளுடன் ஏழு நாள் திட்டத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான ஜியோவின் சர்வதேச திட்டம் ரூ.898-ல் தொடங்குகிறது. 

இதேபோல், ரூ.1,598 வேலிடிட்டி உடன் 14 நாள் திட்டமும் உள்ளது, இது 300 நிமிட அழைப்பு, 3 ஜிபி டேட்டா மற்றும் கடைசியாக, 21 நாட்கள் செல்லுபடியாகும் அதே திட்டம் ரூ.2998 மற்றும் 500 நிமிட அழைப்புகளுக்கு 7 ஜிபி வழங்குகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment