ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சர்வதேச ரோமிங் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோவின் சமீபத்திய அன்லிமிடெட் சர்வதேச ரோமிங் பேக்குகள் ரூ. 898 முதல் ரூ. 3,455 வரை உள்ளது. ரூ. 898 திட்டம் 7 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது.
யு.ஏ.இ, அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தைப் பயப்டுத்திக் கொள்ளலாம். இது இந்தியாவிற்கு அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. அன்லிமிடெட் வாய் காலிங் வசதி, எஸ்.எம்.எஸ் ஆகியவைகளை வழங்குகிறது. கூடுதலாக, ஜியோ புதிய வருடாந்திர ரோமிங் திட்டத்தை ரூ. 2,799 விலையில் அறிமுகம் செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட 3 நாடுகளுக்கு இந்த திட்டம் வழங்கப்படுகிறது. திட்டங்களின் விலை ரூ. 898, ரூ. 1,598, மற்றும் ரூ. 2,998 முறையே 7, 14 மற்றும் 24 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளன. ரூ. 2,998 திட்டமானது இந்தியாவிற்கு 250 நிமிட அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் அழைப்புகள் மற்றும் 7ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ரூ.898 மற்றும் ரூ.1,598 திட்டங்கள் முறையே 100 மற்றும் 150 குரல் அழைப்புகளையும் 3ஜிபி மற்றும் 1ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. மற்ற நாடுகளுக்கான அழைப்புகளுக்கு நிலையான PayGo கட்டணங்கள் பொருந்தும். அவை 100 வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் செய்திகளுடன் வரம்பற்ற உள்வரும் எஸ்எம்எஸ் வழங்குகின்றன. அதிவேக டேட்டா வரம்பு பயன்படுத்தப்பட்ட பிறகு வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“