Advertisment

ஜியோவின் டபுள் டமாக்கா ஆஃபர்: ஜீ5, சோனி லிவ் இலவசம்; புதிய ரீசார்ஜ் திட்டத்தைப் பாருங்க

ஜியோ நிறுவனம் ஓ.டி.டி சந்தாக்களுடன் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Reliance Jio

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிதாக ரூ.909 விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது,  இது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். 

Advertisment

ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம் 

ஜியோவின் ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அனைத்து நெட்வொர்க்குக்கும்  அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. 

அதோடு இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக பல்வேறு ஓ.டி.டி தளங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக 2 முக்கிய ஓ.டி.டி தளங்கள் ஜீ5, சோனி  லிவ் இந்த திட்டத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.  அதோடு ஜியோ சினிமா, ஜியோ டி.வி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவை இதனுடன் வழங்கப்படுகிறது.  

மேலும், இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் 5ஜி சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

 

Jio Recharge Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment