Advertisment

பலசரக்கு பொருள் வாங்க ‘வாட்ஸ் ஆப்’ ஆர்டர்: ஜியோ மார்ட் அனுபவம் இதுதான்!

JioMart Whatsapp Order நாங்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி மளிகைப் பொருள்கள் ஆர்டர் செய்தபோது, என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Jio Mart products ordered in Whatsapp Tamil News

Jio Mart products ordered in Whatsapp

Jiomart Whatsapp Order Tamil News : ஜியோமார்ட் முதன்முதலில் இந்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஆன்லைன் மளிகை சில்லறை விற்பனையாளர்களின் சேவை தேவைப்பட்டதால் ஜியோமார்ட் தொடங்கப்பட்டது. அதற்குப் பின் வந்த மாதங்களில், தொற்றுநோய் இந்தியாவின் டிஜிட்டல் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்தது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மென்மையான விநியோகத்திற்கான ஆன்லைன் தீர்வுகளை உயர்த்த வணிகங்களைக் கட்டாயப்படுத்தியது.

Advertisment

ஜியோமார்ட்டின் தினசரி ஆர்டர்கள் 250,000 தாண்டிவிட்டதாக ஆர்ஐஎல் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி கடந்த ஜூலை மாதம் கூறினார்.

ஜியோமார்ட் என்றால் என்ன?

ஆஃப்லைனில் இருந்து ஆன்லைனில் மளிகை பொருள்களை விநியோகிக்கும் சேவைதான் ஜியோமார்ட். இது, அருகிலுள்ள உள்ளூர் கிரானா கடையிலிருந்து தயாரிப்பு வழங்கப்பட்டவுடன் ஆன்லைனில் ஆர்டர் செய்ய உதவுகிறது. ஆரம்பத்தில் இந்த சேவை தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதிகமான இடங்களில் இருக்கிறது. புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், தொகுக்கப்பட்ட உணவு, பால் பொருட்கள், வீட்டுச் சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றை இதில் ஆர்டர் செய்யலாம்.

ஜியோமார்ட் எவ்வாறு வித்தியாசமானது?

பொருள்களை ஆர்டர் செய்ய மிகவும் வசதியாக இருக்க அனைவராலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் எங்கும் வாட்ஸ்அப் செய்தி சேவையை ஜியோமார்ட் பயன்படுத்துகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஃபேஸ்புக் முதலீட்டாளராக இருப்பதன் நன்மைகளில் ஒன்றான வாட்ஸ்அப்பிலும் ஆர்டர்களை .உறுதிப்படுத்த முடியும். மேலும், இது இலவச வீட்டு விநியோகத்தையும் வழங்குகிறது மற்றும் குறைந்தபட்ச ஆர்டர் மதிப்புக்கு எந்த தடையும் இல்லை.

ஜியோமார்ட், அருகிலுள்ள கடையிலிருந்து தயாரிப்பை வழங்குவதால், இது மற்ற சேவைகளை விட மிக வேகமாக உள்ளது. மேலும், "கேள்விகள் எதுவும் திரும்பக் கேட்கப்படாத கொள்கை (no questions asked return policy)" உள்ளது.

ஜியோமார்ட் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க தள்ளுபடியையும் வழங்குகிறது. ஜியோமார்ட்டில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்தால், விசுவாச புள்ளிகளைப் பெறுவீர்கள். பின்னர் மலிவான விலையில் தயாரிப்புகளைப் பெற நீங்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இதற்காக நீங்கள் ரிலையன்ஸ்ஒன் உறுப்பினராக இருப்பது அவசியம். செலவழித்த ஒவ்வொரு ரூ.200-க்கும் 1 புள்ளி சம்பாதிப்பீர்கள் என்றும் ஒவ்வொரு புள்ளியின் மதிப்பு 0.70 பைசா என்றும் ஜியோமார்ட் கூறுகிறது. 9212999888 என்ற எண்ணில் தவறவிட்ட அழைப்பைக் கொடுத்து மொத்த புள்ளிகளைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

Jio Mart products ordered in Whatsapp Tamil News Jio Mart products ordered in Whatsapp

நாங்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி மளிகைப் பொருள்கள் ஆர்டர் செய்தபோது, என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்

முதலில் எங்கள் தொலைபேசியில் ஜியோமார்ட் செயலி இல்லை. மேலும், வாட்ஸ்அப்பின் உதவியுடன் ஆர்டர் செய்ய நினைத்தோம். ஜியோமார்ட்டின் 88500 08000 என்ற எண்ணிற்கு “ஹாய்” செய்தியை அனுப்பினோம். வாட்ஸ்அப் போட், ஜியோமார்ட் தளத்திற்கு ஒரு இணைப்பை வழங்கியது. ஒரு சில தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆர்டரை முன் வைத்தோம்.

ஆர்டரை முன்வைக்கும் நேரத்தில், நிறுவனம் உங்கள் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் பெயரை உள்ளிடுமாறு கேட்கிறது. எனவே, அடுத்த முறை நீங்கள் ஆர்டர் செய்யும்போது, நீங்கள் உள்நுழையக்கூடத் தேவையில்லை, விவரங்கள் சேமிக்கப்படும். அடுத்ததாகக் கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கக் கேட்கப்படும். இந்த பிரிவில், நீங்கள் இரண்டாவது முறையாக ஏதாவது ஆர்டர் செய்யும்போது உங்கள் ரியாலன்ஸ்ஒன் லாயல்டி புள்ளிகளை சரிபார்க்க முடியும். பின்னர் தள்ளுபடியைப் பெற உடனடியாக அதைப் பயன்படுத்தலாம். கூடுதலாக, நீங்கள் புதிய வாடிக்கையாளராக இருந்தால், ஜியோமார்ட் உங்கள் ROne விசுவாசக் கணக்கில் இயல்பாக ரூ.8.85 பணம் சேர்க்கப்படும். பணம் செலுத்துவதற்கு நெட் பேங்கிங், யுபிஐ, கேஷ் ஆன் டெலிவரி விருப்பங்களைப் பெறுவீர்கள்.

நீங்கள் முதல் முறையாக ஆர்டரை வைத்திருந்தால், செய்தியிடல் பயன்பாட்டில் அனைத்து விவரங்களையும் பெற உங்கள் வாட்ஸ்அப் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். "ஆர்டர் புதுப்பிப்புகள் மற்றும் வாட்ஸ்அப்பில் முக்கியமான தகவலை இயக்கு" என்று ஒரு விருப்பத்தைத் தளம் உங்களுக்கு வழங்கும். (நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு தகவலையும் பெறும்போது, ஆர்டர் விவரங்களைச் சரிபார்க்கத் தளத்தில் sign-in விருப்பமும் உள்ளது.) அதிகாரப்பூர்வ ஜியோமார்ட் செயலியில் எங்களுக்கு வாட்ஸ்அப் விருப்பம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, செயலியைப் பதிவிறக்கவில்லை என்றாலும் உங்கள் வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி ஆர்டர் செய்யலாம். நீங்கள் ஆர்டர் செய்தவுடன், வாட்ஸ்அப், மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றில் உறுதிப்படுத்தல் செய்தி கிடைக்கும்.

நீங்கள் வாட்ஸ்அப்பில் பெறும் உறுதிப்படுத்தல் செய்தி வேறு ஜியோமார்ட் எண்ணிலிருந்து வரும். ஆர்டர் ஒழுங்கு நிலை, பொருள் தொடர்பான கேள்விகள், பணத்தைத் திரும்பப்பெறுதல் தொடர்பான கேள்விகள் மற்றும் கணக்குகளை மாற்றுவது பற்றிய விவரங்களை இது வழங்குகிறது. உங்களிடம் வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் மட்டுமே பிரச்சினை. அதற்கு வாட்ஸ்அப்பில் வேறு வழியில்லை.

ஏற்றுமதி விவரங்களைக் கேட்கும்போது, ஆர்டர் ஐடி, தேதி, நிலை, கட்டண முறை, வாடிக்கையாளர் பெயர், பொருள்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் உட்பட ஒரு பி.டி.எஃப் ஃபைலை பெறுவீர்கள். ரூ.88.99 மதிப்புள்ள இரண்டு பொருட்களை நாங்கள் ஆர்டர் செய்தோம். 'அடுத்த நாள் அவற்றைப் பெறுவேன்' என்று செயலி குறிப்பிட்டிருந்தது.

அதே வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி ஆர்டரை ரத்து செய்யலாம்.

எதிர்காலத்தில், நிறுவனம் செயல்பாடுகளை அளவிடுவதோடு, பிற நகரங்களில் இருப்பை அதிகரிப்பதால், தயாரிப்புகளின் விநியோக நேரம் 1 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நெரிசலான சந்தையில், ஜியோமார்ட்டின் தனிப்பட்ட விற்பனை யுத்தியாக மாறும்.

தற்போது, ஜியோமார்ட் நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment