ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என திட்டங்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப திட்டங்களை வழங்குகிறது. 28 நாட்கள், 56, 84 நாட்கள் வேலிடிட்டி உடன் திட்டங்களை வழங்குகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் சந்தா வழங்க உள்ளது. ரூ.1099 மற்றும் ரூ.1499 திட்டங்களில் இந்த சலுகையை வழங்குகிறது.
ரூ.1099 திட்டம்
ஜியோவின் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் பெற முடியும். Netflix Mobile, JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற கூடுதல் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை கிடைக்கும். இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இது 40ஜிபி போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் Netflix Basic, JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவை அடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“