ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், ஜியோ இரண்டு திட்டங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான பலன்களை வழங்கினாலும், வித்தியாசம் என்னவென்றால், ரூ.1,028 திட்டமானது ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவையும், ரூ.1,029 திட்டத்தில் அமேசான் பிரைம் லைட் சந்தாவும் உள்ளது. இரண்டு திட்டமும் அன்லிமிடெட் 5ஜி சேவையை 84 நாட்கள் வேலிடிட்டியில் வழங்குகிறது.
ரூ. 1,028 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 1,028 திட்டம் தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி ஆகியவற்றை வழங்குகிறது. அதோடு JioTV, JioCinema மற்றும் JioCloud சந்தாவை இலவசமாக பெறலாம். அதோடு இந்த திட்டத்தில் ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவை இலவசமாக பெறலாம்.
ரூ. 1,029 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 1,028 திட்டம் தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி ஆகியவற்றை வழங்குகிறது. அதோடு JioTV, JioCinema மற்றும் JioCloud சந்தாவை இலவசமாக பெறலாம். அதோடு இந்த திட்டத்தில் 1 ரூபாய் கூடுதலான இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் லைட் சந்தாவை பெறலாம்.
எது பெஸ்ட்?
நீங்கள் அடிக்கடி ஸ்விக்கியில் உணவை ஆர்டர் செய்பவராக இருந்தால் , ரூ.1,028 திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கலாம். திரைப்படங்கள் மற்றும் டி.வி நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்பவர்களுக்கும், அமேசானில் ஷாப்பிங் செய்பவர்களுக்கும், இலவச ஷிப்பிங்கை பெற நினைப்பவர்களுக்கு ரூ.1,029 திட்டம் மிகவும் பொருத்தமானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“