/tamil-ie/media/media_files/uploads/2023/05/reliance-jio-sign-bloomberg-759-2.jpg)
Reliance Jio
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விரைவில் இரண்டு புதிய 5ஜி ஆதரவு போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஜியோ சமீபத்தில் ஜியோ பாரத் போன் வெளியிடுவதாக அறிவித்தது. 4ஜி ஃபீச்சர் போனுக்கு அப்கிரேட் செய்ய விரும்பும் மற்றும் மிகக் குறைந்த பட்ஜெட்டைக் கொண்ட பயனர்களுக்கு இது உதவும் என்று கூறியது. இந்நிலையில் 5ஜி ஆதரவு போன்களை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் ஜியோ ட்ரூ 5ஜி என்ற பெயரில் 5ஜி சேவைகளை கடந்தாண்டு முதல் வழங்கி வருகிறது. தற்போது வரை 6258 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை விரிவுபடுத்தி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் இரண்டு புதிய போன்கள் BIS (Bureau of Indian Standards) தளத்தில் காணப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. இதன் பொருள் அவர்களின் வெளியீடு விரைவில் உள்ளது. ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) ஆகஸ்ட் 2023 இன் இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, ஆகஸ்ட் இறுதியில் இது குறித்தான அறிவிப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நிறுவனம் ஜியோ பேஃசிக் போன், லேப்டாப்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்தது. அதே போல் 5ஜி ஆதரவு போன்களையும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.