ஜியோ, ஏர்டெல், வோடஃபோன்: ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’க்கு எது பெஸ்ட்னு பாருங்க!

Jio, AirteL, vodafone best prepaid plans: ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவற்றில் தினசரி 1.5GB டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம்.

By: Updated: July 1, 2020, 09:04:56 PM

Jio news in tamil: இப்போது நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறோம் இதனால் ஒரு வலுவான இணையத் திட்டம் இருப்பது ஓரளவு அவசியமாகிவிட்டது. இதற்காக பெரும்பாலானவர்கள் broadband திட்டம் அல்லது internet dongle ஐ வாங்குகிறோம். அதே போல் நமது கைபேசியிலும் உயிர்ப்புள்ள ஒரு டேட்டா திட்டம் இருக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவற்றில் தினசரி 1.5GB டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம்.

ஜியோ ரூபாய் 399 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த ரூபாய் 399/- ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 1.5GB அதிவேக டேட்டாவை வழங்குகிறது. 1.5GB வரம்பு முடிந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps என குறையும். ஜியோ எண்ணிலிருந்து ஜியோ எண்ணுக்கு அளவில்லாத அழைப்புகள் செய்யும் வசதி மற்றும் ஜியோ எண்ணிலிருந்து வேறு நெட்வொர்க் எண்களுக்கு 2,000 FUP நிமிடங்கள் அழைப்பு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 100 இலவச குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் வழங்கப்படுகிறது. 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் ஜியோ நிறுவனத்தின் சொந்த ஆப்களான JioTV, JioSaavn போன்றவற்றை இலவசமாக அனுகும் வசதியும் உள்ளது.

ஏர்டெல் ரூபாய் 399 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் 1.5GB தினசரி டேட்டா, அளவில்லாத அழைப்புகள் செய்யும் வசதி மற்றும் தினசரி 100 இலவச குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர இலவச Zee5 சந்தா, Airtel Xstream சந்தா, இலவச hello tunes, Wynk Music அனுகும் வசதி, இலவச Shaw Academy ஆன்லைன் கோர்ஸ்கள் மற்றும் ஏர்டெல்லில் இருந்து FASTag வாங்கும் போது ரூபாய் 150 cashback ம் வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூபாய் 399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோனின் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5GB டேட்டா, அளவில்லாத உள்ளூர் மற்றும் STD அழைப்புகள் மற்றும் தினசரி 100 இலவச குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் வழங்கப்படுகிறது. கூடுதலாக நிறுவனம் 5GB டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டாவாக 28 நாட்களுக்கு அளிக்கிறது. 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் நிறுவனத்தின் சொந்த ஆப்பான Vodafone Play app மற்றும் Zee5 ஆகியவற்றுக்கான சந்தாவை இலவசமாக அளிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus work from home jio jio plans jio recharge plans vodafone

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X