Advertisment

ஜியோ களம் இறங்கினாலே ‘மாஸ்’தான்: ‘அன் லிமிடெட் மீட்டிங்’ இனி சாத்தியமே!

Jio Meet: ஒரே நேரத்தில் 100 பங்கேற்பாளர்கள் வரை பங்கேற்கக்கூடிய குழு வீடியோ கான்பரன்ஸ் அழைப்புகளுக்கும் (group video conference call) பயன்படுத்தலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜியோ களம் இறங்கினாலே ‘மாஸ்’தான்: ‘அன் லிமிடெட் மீட்டிங்’ இனி சாத்தியமே!

jiomeet app, jiomeet download, jio meeting, download, jiomeet for windows, ஜியோ மீட், ஜியோமீட், ரிலையன்ஸ் ஜியோ

Jio News In Tamil: JioMeet app இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது : பெரும்பாலான வீடியோ அழைப்பு தளங்களில் இலவச கூட்டங்களுக்கு ஒரு கால அளவு இருக்கும். ஆனால் JioMeet ல் ஒரு கூட்டத்தை 24 மணிநேரமும் எந்தவித இடையூறும் இன்றி நடத்தலாம். அதை எவ்வாறு பதிவிறக்கம் செய்து, ஒரு கூட்டத்தில் சேர்வது என்பதை இங்கு பார்க்கலாம்.

Advertisment

ரிலையன்ஸ் ஜியோ பல மாதங்கள் சோதித்துப் பார்த்தப் பிறகு இறுதியாக JioMeet ஐ நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. Google Play store மற்றும் Apple App store ஆகிய இரண்டிலும் JioMeet ஆப் கிடைக்கிறது. JioMeet ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ சந்தேகத்திற்கு இடமின்றி மற்ற வீடியோ அழைப்பு (video calling) தளங்களான Zoom, Google Meet, Skype, Microsoft Teams ஆகியவற்றின் பயனர்களையும் எடுத்துக் கொள்ள போகிறது. தற்போது JioMeet ஐ 100k ஆண்ட்ராய்ட் பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

jio meet vs zoom: ஜியோ மீட்- ஸூம்

* JioMeet ஐ இரண்டு நபர்களுக்கு இடையே நடைபெறும் கூட்டங்களுக்கும், ஒரே நேரத்தில் 100 பங்கேற்பாளர்கள் வரை பங்கேற்கக்கூடிய குழு வீடியோ கான்பரன்ஸ் அழைப்புகளுக்கும் (group video conference call) பயன்படுத்தலாம்.

* JioMeet ல் பதிவு செய்து (Signing up) ஒரு கூட்டத்தை தொடங்குவது மிக எளிது. வெறுமனே உங்கள் கைபேசி எண், பெயர், மின்னஞ்சல் முகவரி ஆகியவை மட்டும் தான் தேவை.

* பதிவு செய்யாமலும் (signing up) ஒரு கூட்டத்தில் சேர முடியும். ஆனால் ஒரு கூட்டத்தை தொடங்க நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கி உள்நுழைய (login) வேண்டும்.

* Zoom ஐ போன்று ஒரு கூட்டத்தைத் திட்டமிடவும் பங்கேற்பாளர்களுடன் கூட்டக் குறியீட்டை முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளவும் JioMeet உங்களை அனுமதிக்கிறது.

* பெரும்பாலான வீடியோ அழைப்பு தளங்களில் இலவச கூட்டங்களுக்கு ஒரு கால அளவு இருக்கும். ஆனால் JioMeet ல் ஒரு கூட்டத்தை 24 மணிநேரமும் எந்தவித இடையூறும் இன்றி நடத்தலாம்.

* தனியுரிமையை மனதில் வைத்து, JioMeet ல் நடத்தப்படும் ஒவ்வொரு கூட்டமும் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

* Zoom ஐ போன்று JioMeet ம் Screen Sharing ஆப்ஷன் மற்றும் Waiting Room ஆப்ஷனுடன் வருகிறது.

*JioMeet பல சாதன ஆதரவுடன் வருகிறது. ஒரு கூட்டத்தில் இருக்கும் போது ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்திற்கு நீங்கள் தடையின்றி மாற முடியும். இது 5 சாதனங்கள் வரை ஆதரவளிக்கும்.

* JioMeet ல் உள்ள மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் ’Safe Driving Mode’. எங்காவது பயணம் செய்யும் பொழுது முக்கியமான வீடியோ கான்பரன்ஸ் கூட்டங்களில் பங்கேற்பதற்கு இந்த அம்சம் உதவுகிறது.

JioMeet அழைப்பில் எவ்வாறு சேருவது

JioMeet கூட்டத்தில் சேருவதற்கு முகப்பு திரையில் உள்ள Join ஆப்ஷனை வெறுமனே கிளிக் செய்து, கூட்ட அழைப்பாளர் வழங்கிய Meeting ID ஐ உள்ளிட வேண்டும்.

கூட்டத்தில் சேருவதற்கு முன்பு ஆடியோ மற்றும் வீடியோவை முடக்கி (disable) வைப்பதற்கான ஆப்ஷனை இந்த தளம் வழங்குகிறது.

எவ்வாறு ஒரு JioMeet அழைப்பை தொடங்குவது

ஒரு கூட்டத்தை தொடங்க முதலில் நீங்கள் உங்களது பெயர், கைபேசி எண் மற்றும் OTP ஐ உள்ளீடு செய்து பதிவு (sign up) செய்துக் கொள்ள வேண்டும்.

* முகப்பு திரையில் உள்ள New Meeting ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* வீடியோவை ஆன் அல்லது ஆப் செய்ய வேண்டுமா என்பதை தேர்வு செய்துக் கொண்டு, personal meeting ID ஐ உருவாக்கி கொள்ள வேண்டும்.

* Start Meeting என்பதை கிளிக் செய்யவும்

* பங்கேற்பாளர்களை அழைக்க participant ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* குறுஞ்செய்தி, WhatsApp, Twitter மற்றும் இதர தளங்கள் வழியாக Meeting ID இணைப்பை அனுப்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment