Reliance Jio Latest News: ரிலையன்ஸ் ஜியோ திடீரென சலுகை குறைப்பை செய்திருக்கிறது. அதன்படி, ரூ1299 பிரீ பெய்டு திட்டத்தின்படி இனி 365 நாட்கள் பயன்படுத்த முடியாது. இதனால் லட்சக்கணக்கான ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
Advertisment
ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் லாபகரமாக இயங்கும் ஒரு நெட்வொர்க். இலவச டேட்டாக்களை வாரியிறைத்து வாடிக்கையாளர்களை வாரிக் குவித்த நிறுவனமும் கூட. 4 மாதங்களுக்கு முன்பு, ‘தவிர்க்க முடியாத சூழல்’ என குறிப்பிட்டு சில இலவச டேட்டாக்களுக்கு ‘பை’ சொன்னது ரிலையன்ஸ்.
Jio Latest News: ரிலையன்ஸ் ஜியோ சலுகை குறைப்பு
Reliance Jio Reduces Annual Plan Validity: ரிலையன்ஸ் ஜியோ சலுகை குறைப்பு
எனினும் வருடாந்திர பிரி பெய்டு திட்டமான 1299 ரூபாய்க்கான திட்டத்தின் ஜியோ- ஜியோ அழைப்புகள் முழு இலவசமாக வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் காலவரை 365 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டது. தினமும் 24 ஜி.பி. டேட்டா, பிற நெட்வொர்க்களுக்கு 12000 நிமிடங்கள் இலவசம், 3600 இலவச எஸ்.எம்.எஸ்.கள் என சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. ஜியோ ஆப்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டன.
இவற்றில் அதிர்ச்சிகரமாக காலவரையறை 365 நாட்கள் என்பதை 336 நாட்களாக குறைத்து தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. இதனால் இந்தத் திட்டத்தை பெருவாரியாக பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
1299 ரூபாய்க்கான திட்டம் அறிவிக்கப்பட்டு 4 மாதங்களில் சலுகையை ரிலையன்ஸ் ஜியோ குறைத்திருப்பது அதிர்ச்சி மட்டுமல்ல, ஆச்சர்யமும்கூட! இதை வாடிக்கையாளர்கள் எப்படி எதிர் கொள்ளப்போகிறார்கள் என்பது இனிதான் தெரியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.