ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்றார் போல திட்டங்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது ஜியோ குறிப்பிட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு கூடுதல் டேட்டாவை இலவமாக வழங்கி வருகிறது. அதாவது ரூ.219 மற்றும் ரூ.399 திட்டங்களில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.
ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் 3ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இதனுடன், வாடிக்கையாளர்கள் 6 ஜிபி போனஸ் டேட்டாவைப் பெறுகிறார்கள். டேட்டா வவுச்சராக வழங்கப்படுகிறது. இத்திட்டத்துடன் ரூ.61 மதிப்புள்ள 6ஜிபி டேட்டாவை ஆக்டிவேட் செய்யலாம். இலவசமாக பெறலாம்.
அதோடு எப்போதும் போல், JioTV, JioCinema மற்றும் JioCloud சேவைகளைப் பெறலாம். இலவசமாக 5ஜி டேட்டாவையும் பெறலாம். இத்திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.
ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் 14 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. அதோடு, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் வழங்கப்படுகிறது.
ரீசார்ஜுடன் சேர்த்து ரூ.25 மதிப்புள்ள 2ஜிபி போனஸ் டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோகிளவுட் மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா ஆஃபர் போன்றவற்றையும் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“