ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் வருடாந்திர திட்டங்கள் என்றால் ரூ.2000 விலைக்கு மேல் இருக்கும் என்று நினைப்போம். ஆனால் ஜியோ ரூ.895 விலையில் வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை கொண்டுள்ளது. அதுவும் அன்லிமிடெட் காலிங், டேட்டா வசதியை வழங்குகிறது.
அது பற்றி பார்ப்போம்.
ஜியோ ரூ.895 திட்டம்
ஜியோவின் ரூ.895 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 11 மாதங்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. 28 நாட்கள் ஒரு முறை 2ஜிபி டேட்டா கிடைக்கும். மொத்தம் 24ஜிபி டேட்டா வழங்கப்படும். அதே போல் 28 நாட்கள் ஒரு முறை 50 எஸ்.எம்.எஸ் வழங்கப்படும். குறிப்பு இந்த ரீசார்ஜ் திட்டம் அனைவருக்கும் இல்லை ஜியோ போன் பயனர்களுக்கு மட்டும் என்று கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“