Advertisment

தினசரி டேட்டா வரம்பு இல்லாமல் வரும் ஜியோவின் ஒரே திட்டம்; அன்லிமிடெட் 5ஜியும் இருக்கு

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.296 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் வாயிஸ் காலிங் வசதி, எஸ்.எம்.எஸ் வசதியுடன் மொத்த டேட்டாவை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Jio new.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப திட்டங்களை வழங்கி வருகிறது.  ப்ரீபெய்ட், போஸ்ட்பெஸ்ட் திட்டங்களுடன் அன்லிமிடெட் வாயிஸ் காலிங், எஸ்.எம்.எஸ் டேட்டா உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. எல்லா ப்ரீபெய்ட் திட்டங்களும் தினசரி டேட்டா வரம்பு உடன் வரும் நிலையில், ரூ. 296 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மட்டும் தினசரி டேட்டா வரம்பு இல்லாமல்  வரும் ஒரே திட்டமாகும். இதில் குறைந்த அளவு டேட்டா வழங்கப்பட்டாலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 

Advertisment

ஜியோ ரூ.296 திட்டம் 

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாயிஸ் காலிங் வசதி, தினசரி 

100 எஸ்.எம்.எஸ் மற்றும் 25ஜிபி மொத்த டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் ஜியோ வெல்கம் ஆஃபரையும் வழங்குகிறது. இது வரம்பற்ற 5ஜி டேட்டா சலுகையாகும். கூடுதல் நன்மைகள் JioCinema, JioTV மற்றும் JioCloud வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. 

மொத்த டேட்டா தொகுப்பு தீர்ந்துவிட்டாலும்,  இலவசஅன்லிமிடெட் 5ஜி டேட்டா பயன்படுத்தி பயன்பெறலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Reliance Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment