களைக்கட்ட தொடங்கிய ஜியோ 2 ஃபோன் விற்பனை!

ரூ.501 தொகையை செலுத்தி ஜியோ போன் 2-வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல்.

ஜியோவின் அடுத்த  அதிரடி வரவான ஜியோ போன் 2 விற்பனை நாடு முழுவதும் தொடங்கியது.  இன்று (30.8.18) மதியம் 12 மணி முதல்  Jio.com தளத்தில்  ஜியோ  ஃபோன் 2 விற்பனை ஆரம்பமானது.

ஜியோ போன் 2 :

மும்பையில் நடைப்பெற்ற 41 ஆவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ ஃபோன் 2 அறிமுகப்படுத்தப்பட்டது.3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரிலையன்ஸ் கூட்டத்தில் தான் முதன்முறையாக ஜியோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜியோவின் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக பரவி இன்று  ஜியோ சேவை டெலிகாம் மார்க்கெட், மொபைல் சேவை,   இணைய சேவை என அனைத்திலும் தனி சாம்ராஜ்ஜியத்தையே  தனகென அமைத்துள்ளது.

41 ஆவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃபோன் 2  குறித்த அனைத்து தகவல்கள் இணையத்தில் கசிந்தன. விலை மற்றும் சிறம்பசங்கள் குறித்தும்  பட்டியல்  வெளியானது.

சென்ற வருடம் வெறும் 1,500 ரூபாய்க்கு ஜியோ ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டது.   அதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ஜியோ போன் 2 வின் விலை ரூ, 2999 விலை.

இந்த ஃபோன் கீபேடுடன் கூடிய அம்சத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதன் விற்பனை இன்று மதிய 12 மணி முதல் ஆரம்பமானது.ஏற்கெனவே ஜியோ போனை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் புதிய போனை எக்சேஞ்ச் ஆபர் மூலம் மாற்றிக் கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jio.com தளத்தில்  புக் செய்து இந்த ஃபோனை பெற்றுக் கொள்ளலாம்.

அதே போல் ஹங்கமா சலுகையை பயன்படுத்தி ரூ.501 தொகையை செலுத்தி ஜியோ போன் 2-வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல்.

ஜியோ போன் 2  சிறப்பம்சங்கள்:

1. 2.4 இஞ்ச் அளவில் QVGA டிஸ்பிளே

2. 512 MB ரேம்

3. 4GB மெமரி ஸ்டோரெஜ்

4.128 GB அளவிற்கு அதிகப்படுத்திக்கொள்ளும் MicroSD கார்டு வசதி

5. 2MP பின்புற கேமரா

6. VGA கொண்ட முன்பக்க கேமரா

7.2,000 mAh திறன் பேட்டரி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

×Close
×Close