Jio Pos lite Tamil Nadu News: ரிலையன்ஸ் ஜியோ, உங்களுக்கு வழங்கும் ரீசார்ஜ் ஆஃபர்கள் எப்போதுமே வித்தியாசமானவை. வெறுமனே ரீசார்ஜ் செய்வதுடன், அதன் மூலமாக நீங்கள் ஒரு தொகை சம்பாதிக்கவும் வழிவகுக்கிறது ஜியோ போஸ் லைட் ஆப்! அதாவது, மற்றவர்களின் எண்ணுக்கு ரீசாரஜ் செய்து பயனர்கள் கமிஷன் சம்பாதிக்க Jio POS Lite என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
சமூக ரீசார்ஜுக்காக, ரிலையன்ஸ் ஜியோ JioPOS Lite என்ற ஆப்பை களமிறக்கியுள்ளது. Google Play Store ல் கிடைக்கக்கூடிய இந்த ஆப்பை மூலம் தனிநபர்கள் ஜியோவின் கூட்டாளியாகி, மற்ற ஜியோ பயனாளிகளின் பிரீபெய்ட் கைபேசி எண்களுக்கு ரீசார்ஜ் செய்து சம்பாதிக்கலாம். கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயம் என்பதால் பதிவுச் செய்யும் முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் எந்தவித ஆவணங்களின் நகல்களையும் சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் எந்தவித physical verification செயல்முறையும் நடத்தப்படமாட்டாது என, Play Store ல் உள்ள இந்த ஆப்பின் விளக்கவுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Jio Pos lite Recharge Commission Scheme: ஜியோ கூட்டாளியாவதற்கான வழிமுறை
JioPOS மூலம் ஜியோவுடன் கூட்டாளியான பிறகு, பயனர்கள் மற்ற பயனர்களுடைய பிரீபெய்ட் இணைப்புகளுக்கு ரீசார்ஜ் செய்து கமிஷன் சம்பாதிக்கலாம். மற்ற இணைப்புகளுக்கு ரீசார்ஜ் செய்யும் வசதி MyJio app ல் வழங்கப்பட்டாலும், அதில் கமிஷன் வழங்கப்படுவதில்லை. மறுபுறம் JioPOS ஆப் 4.16 சதவிகித கமிஷனை ஜியோ ரீசார்ஜ் கூட்டாளிகளுக்கு வழங்குகிறது. கடந்த 20 நாட்களில் சம்பாதித்த தொகை மற்றும் மேற்கொண்ட பரிவர்த்தனைகள் ஆகியவற்றை பயனர்கள் சரிபார்க்கும் வசதியையும் இந்த ஆப் வழங்குகிறது.
JioPOS ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு பயனர் பதிவு செய்து ஜியோ கூட்டாளியாகலாம் (Jio Partner). பதிவு செய்ய பயனருக்கு ஒரு ஜியோ இணைப்பு இருக்க வேண்டும். பதிவு செய்தல் முடிந்ததும், இந்த ஆப் உங்களை ரூபாய் 500/-, 1000/- அல்லது 2000/- என்ற அளவில் ஒரு தொகையை உங்கள் wallet ல் ஏற்றச் சொல்லும். இந்த ஆப் மூலம் ஒவ்வொரு முறை ரூபாய் 100 செலவு செய்யப்பட்ட பிறகும், பயனருக்கு ரூபாய் 4.166/- கமிஷனாக கிடைக்கும்.
தற்போது இந்த ஆப் Google Play Store ல் Lite version ஆக கிடைத்தாலும், தற்போதுவரை இந்த ஆப்பின் iOS பதிப்பு இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.