scorecardresearch

ஜியோ பயனர்களுக்கு சூப்பர் ஆஃபர்: ஃபேன்சி நம்பர் விரும்புபவர்கள் இதை செய்யுங்க; விலை இவ்வளவு தான்

ஜியோ போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு குறைந்த விலையில் ஃபேன்சி நம்பர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

Reliance Jio
Reliance Jio

ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாகும். ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 5ஜி சேவையை வரிவுபடுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவை கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறது. ஜியோ நிறுவனம் ப்ரீபெயட், போஸ்ட்பெய்ட் என்ற முறையில் ரீசார்ஜ் சேவைகளை வழங்குகிறது.

2 வகையான ரீசார்ஜ்களிலும் அன்லிமிடெட் திட்டம், சலுகைகள், ஓ.டி.டி சலுகை எனப் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திட்டங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜியோ போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஃபேன்சி நம்பர் பெறுவதற்கான சலுகை வழங்கியுள்ளது. அதாவது எளிதாக தெரிந்து கொள்ளும்படியான மொபைல் நம்பரை பெறுவதற்கான ஆஃபர் ஆகும். இந்தியாவில் 10 இலக்க எண்கள் மொபைல் எண்களாக உள்ளன. இதில் ஜியோ போஸ்ட்பெய்ட் ஆஃபரில் 4 எண்கள் ஃபேன்சி எண்களாக பெற அனுமதிக்கிறது. ரூ.499 பணம் செலுத்தி உங்களுக்கு விருப்பமான ஃபேன்சி நம்பர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஜியோ ஃபேன்சி நம்பர் பெறுவது எப்படி?

  1. ஜியோவின் அதிகாரப்பூர்வ பக்கமான Jio choice number என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.
  3. ஓ.டி.பி பெற உங்கள் தற்போதைய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.
  4. இப்போது உங்கள் விருப்பமான 4 இலக்க எண், உங்கள் பெயர், பின்கோட் ஆகியவற்றை பதிவிடவும்.
  5. அடுத்தாக நீங்கள் கொடுத்த 4 இலக்க எண்ணில் உள்ள மொபைல் நம்பர்கள் திரையில் காட்டப்படும். அதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை செலக்ட் செய்யவும்.
  6. புக் நம்பர் என்ற பட்டனை கொடுத்து, ரூ. 499 கட்டணமாக செலுத்தவும்.
  7. இப்போது நம்பர் புக் செய்யப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ் அதோடு புக்கிங் கோட் கொடுக்கப்பட்டிருக்கும். இதை Save செய்து வைக்கவும்.
  8. புதிய சிம் கொண்டு வரும் ஜியோ ஏஜெண்ட் இடம் புக்கிங் கோட் தெரிவித்து சிம்-ஐ பெற்றுக் கொள்ளவும். அவ்வளவு தான்.
  9. புதிய ஜியோ சிம் புக் செய்யப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களில் கிடைக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Jio postpaid fancy number at rs 499 how to get it