ரூ.299 முதல் ஜியோ போஸ்ட் பெய்ட் திட்டங்கள்: அன்லிமிடெட் 5ஜி டேட்டா, இலவச ஜியோ ஆப்ஸ்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.500க்கும் குறைவான விலையில் சிறந்த போஸ்ட் பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த அனைத்து திட்டத்திலும் இலவச 5ஜி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.500க்கும் குறைவான விலையில் சிறந்த போஸ்ட் பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த அனைத்து திட்டத்திலும் இலவச 5ஜி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Reliance Jio

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் என ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப 28 நாட்கள், 56,84,90 நாட்கள் என ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. வேலிடிட்டி, திட்ட வசதிகள் பொறுத்து கட்டணம் இருக்கும். 

Advertisment

அந்த வகையில் பெரும்பாலான பயனர்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களே பயன்படுத்துகிறோம். ஆனால் போஸ்ட் பெய்ட் திட்டத்திலும் ப்ரீபெய்ட் போலவே அதே அளவிலான நன்மைகள் கிடைக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.500க்கும் குறைவான விலையில் சிறந்த போஸ்ட் பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. 

ரிலையன்ஸ் ஜியோ தனது இந்திய வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 5 போஸ்ட் பெய்ட் திட்டங்களைக்  கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் ரூ.299 முதல் ரூ.1499 வரை உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும்  அன்லிமிடெட் 5ஜி டேட்டா  சலுகையுடன் வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோவால் வெளியிடப்பட்  5ஜி வெல்கம் ஆஃபரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி,  ரூ.239 அல்லது அதற்கு அதிகமான மொபைல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 5ஜி வெல்கம் ஆஃபரைப் பெற முடியும். அந்த வகையில் போஸ்ட் பெய்ட் பயனர்களும் இந்த நன்மையைப் பெறலாம். 

தற்போது ஜியோவில் ரூ.500க்கும் குறைவான விலையில் 2 போஸ்ட் பெய்ட் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் ரூ.299 மற்றும் ரூ.399க்கு வருகின்றன.

Advertisment
Advertisements

ரூ. 299 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 போஸ்ட்பெய்ட் திட்டமானது 30ஜிபி மாதாந்திர டேட்டாவுடன் வருகிறது. இது லம்ப்சம் டேட்டாவாகும். அதாவது பயனர்கள் ஒரே நாளில் கூட இந்த டேட்டாவை பயன்படுத்தலாம். அல்லது 1 மாதம் வரை வைத்தும் பயன்படுத்தலாம். 30ஜிபி உச்ச வரம்புக்கு பின் பயன்படுத்தும் ஒவ்வொரு கூடுதல் ஜிபி டேட்டாவுக்கும் பயனர் ரூ.10 செலுத்த வேண்டும். 

இருப்பினும் இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குவதால் பயனர்கள் 5ஜி கவரேஜ் உள்ள இடத்தில் இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. 

மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, தினம் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை பயனர் பெறலாம். இதனுடன், பயனர் கூடுதல் நன்மைகளாக JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றைப் பெறுகிறார்கள். 

ரூ. 399 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டமானது 75ஜிபி டேட்டாவுடன் வருகிறது. 75 ஜிபி பயன்பாட்டிற்கு பிறகு பயன்படுத்தும் ஒவ்வொரு ஜிபி டேட்டாவிற்கும் கூடுதலாக ரூ. 10 செலுத்த வேண்டும். மேலும் இந்தத் திட்டத்தில் கூடுதலாக 3 சிம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு சிம்மிற்கும் தேவைப்பட்டால் பயனர் ரூ.99 செலுத்தி இந்த திட்டங்களை பகிர்ந்து கொள்ளலாம். 

இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் கிடைக்கும். ஒவ்வொரு கூடுதல் சிம்மிலும் 5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

மேலே கூறியது போல், இந்த திட்டத்தில் பயனர்கள் உண்மையிலேயே வரம்பற்ற 5G டேட்டாவைப் பெறுகிறார்கள். JioTV, JioCloud மற்றும் JioCinema ஆகியவற்றின் கூடுதல் நன்மைகளையும் பெறுவார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

 

Jio Recharge Plan Reliance Jio

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: