ஜியோ, இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாகும். ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என திட்டங்களை வழங்குகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப 1 மாதம், 3 மாதம், 1 வருடம் என பல்வேறு வகைகளில் திட்டங்களை வழங்குகிறது.
ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் இரண்டிலும் டேட்டா, அழைப்புகள், எஸ்.எம்.எஸ் ஆகியவை உள்ளடக்கிய அன்லிமிடெட் திட்டங்கள் உள்ளன.
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இலவச சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சலுகை புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதில் 3 திட்டங்கள் உள்ளன. ரூ.399, 699 ஆகியவை பேம்லி பேக் திட்டமாகும். ரூ.599 திட்டம் தனி நபர் திட்டமாகும்.
இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றை 30 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம். இந்த அனைத்து திட்டங்களும் அன்லிமிடெட் திட்டங்களாகும். டேட்டா, அழைப்புகள், எஸ்.எம்.எஸ் ஆகியவை பயன்படுத்த முடியும். ஜியோ டி.வி, சினிமா, ஜியோ Sawan மற்றும் Caller Tune வசதிகளையும் பயன்படுத்த முடியும். ஜியோ ரூ 399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 75 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் பெற முடியும்.
இந்த திட்டத்தில் 3 Add on குடும்ப சிம்களுக்கான விருப்பமும் உள்ளது, ஒரு சிம்மிற்கு 5 ஜிபி டேட்டா. மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ சவான் மற்றும் அன்லிமிடெட் காலர் ட்யூன் வசதிகள் உள்ளன. ஜியோ ரூ 699 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 100 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கும். மேலும், எஸ்.எம்.எஸ் சேவையும் உள்ளன.
அதோடு சில போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஓ.டி.டி சேவைகள், இலவச அமேசான் ப்ரைம் சந்தாவும் வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil