ஜியோ இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அண்மையில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின. இருப்பினும் சில திட்டங்கள் ஒரளவு குறைவான விலையிலும், பணத்திற்கு ஏற்ப சிக்கனமாகவும் இருக்கும் திட்டங்கள் உள்ளன. ஜியோ ப்ரீபெய்டு திட்டம் ரூ.10 முதல் தொடங்கி 5,751 ரூபாய் வரை திட்டங்கள் உள்ளன.
ரூ.10 விலையில் வரும் திட்டம் டாக்டைம் திட்டமாகும். ரூ.10க்கு ப்ரீபெயட் ரீசார்ஜ் செய்தால் காலிங் வசதி வழங்கப்படும். அதே போல் ரூ.26 திட்டத்தில் டேட்டா பேக், அதைத் தொடர்ந்து ரூ.200 விலையில் ஃபேசிக் ரீசார்ஜ் திட்டம் காலிங் வசதி, டேட்டா ஆகியவை பெறலாம்.
ஜியோவின் சிக்கனமான திட்டமாக ரூ.129 திட்டம் உள்ளது. அன்லிமிடெட் காலிங் வசதி, 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் ஆகியவை 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“