ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தா இலவமாக வழங்கப்படும். ஜியோசாவன் என்பது மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமாகும். கட்டணம் செலுத்தி பாடல்கள் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் தற்போது புதிய திட்டம் மூலம் இதை இலவசமாக பெறலாம். அதோடு விளம்பரமில்லா இசையை கேட்டு ரசிக்கலாம்.
ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான இந்த திட்டத்தில் ரூ.269 முதல் ரூ.789 வரை திட்டங்கள் வழங்கப்படுகிறது. ஜியோசாவன் ப்ரோ சந்தாவை தனியாகப் பெற ரூ.99 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் பணம் செலுத்தால் ரீசார்ஜ் திட்டத்தில் பயன் பெறலாம்.
ரூ.269 திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் .5 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படும், அதோடு ஜியோசாவன் சந்தா, ஜியோடியூன்ஸ் ஆகியவைகளை பயன்படுத்தலாம். இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ரூ. 589 மதிப்பிலான திட்டம் இதே பலன்களுடன் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil