ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் அண்மையில் ஜியோ, ஏர்டெல், வி.ஐ என அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் 25 சதவீதம் வரை விலை உயர்வு செய்தன.
இந்நிலையில் ஜியோ ரூ.11 விலையில் அதிக டேட்டாவை வழங்கும் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூ.11 விலை திட்டம் டேட்டா பேக் திட்டமாகும். இந்த திட்டத்தில் 10ஜிபி ஹை-ஸ்பீடு டேட்டா வழங்கப்படுகிறது. அவசரமாக அதிக வேக டேட்டா தேவைப்படுபவர்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இது 1 மணி நேரம் வேலிடிட்டி கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“