/indian-express-tamil/media/media_files/zqWyHXcLyTXBdaKSbloY.jpg)
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜியோ பயனர்களின் வசதிக்கு ஏற்ப ஓ.டி.டி பயன்படுத்துவதற்கு என தனியாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதில் 12 ஓ.டி.டி தளங்களுக்கான அணுகலை வழங்குகிறது. ரூ.148 திட்டம் என்ற புதிய ப்ளானை அறிமுகம் செய்துள்ளது. எனினும் இந்த திட்டத்திற்கு ஆக்டிவ் ரீசார்ஜ் தேவை. அதுகுறித்து இங்கு பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.148 திட்டம்
ஜியோவின் ரூ.148 திட்டம் ஜியோடிவி பிரீமியத்துடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். JioTV பிரீமியம் என்பது ஏற்கனவே இருக்கும் JioTV இயங்குதளத்திற்கு ஒரு புதிய நீட்டிப்பாகும். JioTV பிரீமியம் மூலம், வாடிக்கையாளர்கள் ஒரே லாக்கின் கீழ் பல OTT தளங்களில் இருந்து உள்ளடக்கத்தை அணுக முடியும். JioCinema பிரீமியம் உள்ளடக்கம் JioCinema இயங்குதளத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ரூ.148 திட்டத்தில் 10ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது டேட்டா வவுச்சர் மற்றும் இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. நீங்கள் இதை வாங்குவதற்கு முன் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருக்க வேண்டும். திட்டத்துடன் வழங்கப்படும் JioTV பிரீமியம் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ஓ.டி.டி சலுகைகள்
SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lanka, Planet Marathi, Chaupal, DocuBay, EPIC On மற்றும் Hoichoi ஆகியவை இந்த திட்டத்துடன் நீங்கள் பெறும் ஓ.டி.டி சலுகைகள் ஆகும். ஜியோசினிமா பிரீமியத்திற்கான கூப்பன் வாடிக்கையாளருக்கு MyJio ஆப் மூலம் வழங்கப்படும். பயனர் தனது பதிவு செய்யப்பட்ட ஜியோ எண்ணுடன் உள்நுழைந்ததும் வவுச்சர்கள் பிரிவின் கீழ் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.