ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களாக இருந்து வருகிறது. அண்மையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஜியோ 13-25% உயர்த்தியது. இதன் மூலம் பேஸிக் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.155ல் இருந்து இப்போது ரூ.189 ஆக உயர்ந்தது. இருப்பினும் இந்த விலை, ஏர்டெல்லின் பேஸிக் ப்ரீபெய்ட் திட்டத்தை விட குறைவாகும். ஏர்டெல் இதே பேஸிக் ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.199-க்கு விற்பனை செய்கிறது.
ஜியோவின் ரூ.189 திட்டம்
ரூ.189 ப்ரீபெய்ட் திட்டம், முன்பு ரூ.155 ஆக இருந்தது. விலை உயர்வுக்குப் பின் ரூ.189 ஆக உள்ளது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 2ஜிபி மொத்த 4ஜி டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்குகிறது.
விலை உயர்வு இருந்தபோதிலும், ஜியோவின் திட்டம் ஏர்டெல்லின் பேஸிக் திட்டத்தின் விலையை விட குறைவாகும். ஏர்டெல் இதே பலன்களுடன் ரூ.199 கட்டணம் வசூலிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“