Jio Recharge Plans Tamil Tech News : கொரோனா காலகட்டத்தில் மக்கள் அனைவரையும் சலிப்பு அடையாய் வைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது இணைய உலகம்தான். அதிலும் ஓடிடி இயங்குதளங்கள் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. மேலும், வீட்டிலிருந்து வேலை செய்வது ஓர் புதிய இயல்பாகவே மாறிவிட்டது. ஆனால் அதற்கு, கூடுதல் டேட்டா தேவைப்படுமே. இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க, தினசரி கூடுதல் டேட்டா தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏராளமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ள. அந்த வரிசையில் ஜியோவின் ஆரம்ப ஆட் ஆன் ரீசார்ஜ் பேக் ரூ.151-க்கு கிடைக்கிறது. இந்த ரீசார்ஜ் பேக்கில் 30 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். இது தவிர ரூ.201 மற்றும் ரூ.251 ரீசார்ஜ் பேக்குகளும் கிடைக்கின்றன. இந்த மூன்று டேட்டாக்களும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ஜியோ டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் பேக்
'ஒர்க் ஃப்ரம் ஹோம்' பேக்கிற்கு கீழ் மூன்று ரீசார்ஜ் பேக்குகள் ஜியோவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜியோவின் ரூ.151 ரீசார்ஜ் திட்டத்துடன் ரூ.120 மற்றும் ரூ.251 ஆகிய இரண்டு ப்ரீபெய்டு ரீசார்ஜ் பேக்குகளும் கிடைக்கின்றன. ரூ.151 ஆட் ஆன் பேக்கில் 30 ஜிபி அதிவேக 4 ஜி இன்டர்நெட் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. அதே போல, 40 ஜிபி வரம்பற்ற தரவு 30 நாட்களுக்கு ரூ.120-ன் ஆட் ஆன் தொகுப்பில் கிடைக்கிறது. மேலும், 50 ஜிபி டேட்டா, ரூ.251 ரீசார்ஜ் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஆட்-ஆன் பேக் செயல்படுத்தல்
தினசரி பெறப்பட்ட டேட்டா தீர்ந்துவிட்டால், ஆட்-ஆன் பேக் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, வழக்கமான ரீசார்ஜ் பேக்கிலிருந்து தினசரி 3 ஜிபி டேட்டாவை முழுமையாகப் பயன்படுத்தினால், இந்த ஆட்-ஆன் பேக் ஆக்டிவேட் செய்யப்படும். பயனர்கள் இந்த 30 ஜிபி, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி தரவை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தலாம். மேலும், இதனை ஒரே நாளில் அல்லது 30 நாட்களுக்கு ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 30 ஜிபியின் 3 ஜிபி தரவு தீர்ந்த பிறகு இது செயல்படுத்தப்படுகிறது.
இது தவிர, ஜியோ தனது ஃபைபர் லைனை பல நகரங்களில் கிடைக்கச் செய்துள்ளது. எனவே, உங்களுக்குக் கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், நீங்கள் லேன் சேவைக்கு மாறலாம். இருப்பினும், வீட்டிலிருந்து செய்யும் வேலைக்கு 50 ஜிபி டேட்டா-ஆன் பேக் போதுமானதாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"