ஜியோ டபுள் டேட்டா: உங்களுக்கான சலுகை, மிஸ் பண்ணாதீங்க!

Reliance Jio Fiber Net: எல்லா திட்டங்களுக்கும் சேர்க்கப்பட்ட இரட்டை டேட்டா தற்காலிகமானது, மேலும் ஊரடங்கு செயல்முறை முடிந்ததும் அகற்றப்படும்.

Jio Tamil Nadu News: ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு கூடுதல் டேட்டா நன்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. Bronze முதல் Titanium வரையிலான வருடாந்திர சந்தா திட்டங்களில் நிறுவனம் இரட்டிப்பு டேட்டாவை மேம்படுத்தியுள்ளது.

Bronze ஜியோ Fiber திட்டம்

Bronze திட்டம் வருடாந்திர திட்ட சந்தாதாரர்களுக்கு 350 GB டேட்டாவை வழங்குகிறது – கூடுதலாக 100 GB மாதாந்திர டேட்டாவை புதிய சலுகையாக வழங்குகிறது. பயனர்கள் மாதாந்திர அடிப்படையிலான வாடகையை தேர்வு செய்தால், டேட்டா நன்மை 250 GB ஆகும். இதில் 100 GB திட்ட நன்மை, 100 GB ஊரடங்கு இரட்டிப்பு டேட்டா நன்மை மற்றும் 50 GB டேட்டா அறிமுக சலுகை ஆகியவையும் உள்ளடங்கும். ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வரும் சூழலில், இரட்டிப்பு டேட்டா சலுகை விரைவில் முடிவுக்கு வரக்கூடும்.


Silver ஜியோ Fiber திட்டம்

Silver திட்டத்துக்கான 12 மாத சந்தாவில் இப்போது 800 GB மொத்த மாதாந்திர டேட்டா வழங்கப்படுகிறது, 200 GB கூடுதல் வருடாந்திர போனஸுடன். இந்த தொகுப்பு 200 GB சந்தா லாபம், 200 GB இரட்டிப்பு டேட்டா லாபம், 200 GB promotional டேட்டா மற்றும் 200 GB ஆண்டு திட்ட நனமைகளையும் வழங்குகிறது.

அதே போல் Gold திட்டம் ஆண்டு சந்தாதாரர்களுக்கு மொத்தமாக 1,750 GB மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது. இது 500 GB ஆண்டு திட்ட ஆதாயம், 250 GB அறிமுக டேட்டா, 500 GB ஊரடங்கு இரட்டிப்பு டேட்டா ஆதாயம் மற்றும் 500 GB திட்ட நன்மை ஆகியவை அடங்கும்.

Diamond ஜியோ Fiber திட்டம்

ஜியோ Fiber Diamond திட்டம் இப்போது ஆண்டு சந்தாதாரர்களுக்கு 4,000 GB அதி வேக மாதாந்திர டேட்டா நன்மைகளை வழங்குகிறது. Diamond திட்டம் 12 மாத சந்தாவை தேர்வு செய்தவர்களுக்கு 1,250 GB மாதாந்திர டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் அறிமுக டேட்டா நன்மையாக 250 GB, ஊரடங்கு காலத்து 1250 GB இரட்டிப்பு டேட்டா மற்றும் திட்ட நன்மையாக 1.250 GB உடன் வருகிறது.

Platinum திட்டம் மொத்தமாக 7500 GB மாதாந்திர டேட்டா நனமைகளை ஆண்டு சந்தாதாரர்களுக்கு நீண்ட கால திட்ட வாங்குபவர்களுக்கு மாதத்திற்கு 2.500 GB வருடாந்திர நன்மையும் வழங்குகிறது. தொகுப்பில் சேவை ஆதாயமாக 2.500 GB யும், ஊரடங்கு காலத்தில் இரட்டிப்பு டேட்டா ஆதாயமாக 2.500 GB யும், ஆண்டு டேட்டா நன்மையாக 2.500 GB உள்ளடக்கியுள்ளது.

Titanium ஜியோ Fiber திட்டம்

புதிய கூடுதல் வருடாந்திர திட்டத் டேட்டாவுடன், மிகவும் பிரீமியம் Titanium ஜியோ Fiber திட்டம் இப்போது இப்போது 15,000 GB மாதாந்திர டேட்டா நன்மைகளை வழங்குகிறது. திட்ட நன்மையாக 5,000 GB, ஊரடங்குக்கான இரட்டிப்பு டேட்டாவாக 5,000 GB மற்றும் 5,000 GB ஆண்டு திட்ட நன்மைகளையும் இந்த திட்டத்தில் அடங்கும்.

ஓரிரு திட்டங்களில் சேர்க்கப்பட்ட அறிமுக டேட்டா ஆறு மாதங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். எல்லா திட்டங்களுக்கும் சேர்க்கப்பட்ட இரட்டை டேட்டா தற்காலிகமானது, மேலும் ஊரடங்கு செயல்முறை முடிந்ததும் அகற்றப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close