/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-80-1.jpg)
Jio Tamil News
Jio Tamil News, jiofi 5 months free data offer: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சுதந்திர தின சலுகையின் கீழ், நியூ ஜியோஃபை 4 ஜி வயர்லெஸ் ஹாட்ஸ்பாட்டை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்புகளுடன் 5 மாதங்கள் வரை இலவச டேட்டாக்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. சலுகையை அனுபவிக்க, வாடிக்கையாளர்கள் சிம் கார்டிற்கான எஃப்.ஆர்.சி ப்ளானுடன் (FRC plan) ரூ .1,999 விலையில் புதிய ஜியோஃபை சாதனத்தை வாங்க வேண்டும்.
இந்த சலுகையைப் பெற முயற்சிக்கும் வாடிக்கையாளர்கள் முதலில் ரூ. 199, ரூ .249, ரூ. 349 போன்ற ஏதேனும் ஒரு ரீசார்ஜ் மூலம் தங்கள் ஜியோஃபை சிம் கார்டை ஆக்டிவேஷன் செய்ய வேண்டும். இது தவிர, ஜியோ பிரைம் உறுப்பினராக இணைய கூடுதலாக ரூ .99 கட்டணமும் செலுத்த வேண்டும்.
Jio fiber jiofi 5 months free data offer: மூன்று ஜியோஃபை திட்டங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்
ரூ. 199 ரீசார்ஜ் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தினசரி 1.5 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற ஜியோ-ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத நெட்வொர்க் அழைப்புகளுக்கு 1,000 எஃப்யூபி நிமிடங்கள், 100 தினசரி எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 28 நாட்கள் .
ரூ .249 திட்டத்தின் கீழ், தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற ஜியோ -ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 1000 எஃப்யூபி நிமிடங்கள், 100 தினசரி எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்கின்றது . இந்த ப்ளானின் வேலிடிட்டி 28 நாட்கள்.
கடைசியாக, ரூ. 349 திட்டத்தின் கீழ், 3 ஜிபி தினசரி தரவு, வரம்பற்ற ஜியோ - ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 1,000 எஃப்யூபி நிமிடங்கள் மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைகின்றது.
இந்த திட்டம் தற்போது நியூ ப்ரீபெய்ட் ஜியோ சிம் கார்டு, மற்றும் ரூ .1,999 விலை கொண்ட ஜியோஃபை சாதனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.