ரீசார்ஜ் செய்ய முடியாத ஜியோபோன் பயனர்களுக்கு 300 நிமிட இலவச அழைப்பு!

Jio to provide 300 minutes of free outgoing calls ஒரு பயனர் தனது தொலைபேசியை ரூ.75-க்கு ரீசார்ஜ் செய்தால், அவருக்கு ரூ.75 மதிப்புள்ள கூடுதல் ரீசார்ஜ் இலவசமாகக் கிடைக்கும்.

Jio to provide 300 minutes of free outgoing calls Tamil News
Jio to provide 300 minutes of free outgoing calls Tamil News

Jio to provide 300 minutes of free outgoing calls Tamil News : தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில் பொது மக்கள் தொடர்ந்து இணைந்திருக்க உதவும் வகையில் ஜியோ தனது ஜியோபோன் பயனர்களுக்கான புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. தொற்றுநோய்களின் போது ரீசார்ஜ் செய்ய முடியாத ஜியோபோன் பயனர்களுக்கு, மாதத்திற்கு 300 நிமிட இலவச வெளிச்செல்லும் அழைப்புகளை நிறுவனம் வழங்கும். ரீசார்ஜ் செய்த ஜியோபோன் பயனர்கள் அதே மதிப்பின் ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாகப் பெறுவார்கள்.

“கோவிட் தொற்றுநோயின் இந்த முன்னோடியில்லாத காலங்களில், ஜியோவில் நாங்கள் இணைந்திருப்பது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், குறிப்பாக நமது சமூகத்தின் குறைந்த சலுகை பெற்ற பிரிவுகளுக்கு அணுகக்கூடியதாகவும், மலிவு விலையிலும் இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் பரவும் காலகட்டத்தில் ஜியோபோன் பயனர்களுக்கு புதிய வசதியை வழங்க ஜியோ ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்துள்ளது. பயனர்கள் ஒதுக்கீட்டிலிருந்து ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் பயன்படுத்த முடியும்.

இந்தப் புதிய திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் ஜியோபோன் பயனர்கள் இப்போது அதே திட்டத்தின் கூடுதல் ரீசார்ஜ் இலவசமாகப் பெறுவார்கள். அதாவது ஒரு பயனர் தனது தொலைபேசியை ரூ.75-க்கு ரீசார்ஜ் செய்தால், அவருக்கு ரூ.75 மதிப்புள்ள கூடுதல் ரீசார்ஜ் இலவசமாகக் கிடைக்கும்.

தற்போது ஜியோபோன் பயனர்களுக்கு, ஐந்து திட்டங்களை ஜியோ கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் ரூ.75=ல்  தொடங்கி ரூ.749 வரை செல்கின்றன. ரூ.75 திட்டம் ஒரு நாளைக்கு 100 எம்.பி டேட்டாவுடன் 50 எஸ்எம்எஸ் மற்றும் மொத்தம் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ.125 திட்டம் ஒரு நாளைக்கு 500 எம்பி டேட்டா அல்லது 0.5 ஜிபி மற்றும் 28 நாட்கள் காலத்திற்கு மொத்தம் 14 ஜிபி டேட்டாவைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் இலவசம். ரூ.155 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா 28 நாட்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது. அதே நேரத்தில் ரூ.185 திட்டத்தில் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா உள்ளது.

ரூ.749 திட்டம் மிகவும் விலையுயர்ந்தது. இது, 336 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில் ஒவ்வொரு 28 நாட்களுக்கு 50 எஸ்எம்எஸ் அடங்கும். அனைத்து ஜியோபோன் திட்டங்களும் சந்தா மற்றும் ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோவின் சொந்த பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகின்றன. அழைப்பு அன்லிமிடெட். ஜியோஃபோனுக்குள் ஜியோ சிம் இருந்தால் மட்டுமே இந்த திட்டங்கள் செயல்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பயனர்கள் தங்கள் அதிவேக தினசரி டேட்டாவை வெளியேற்றிய பிறகு, அதன் வேகம் 64Kbps-ஆக குறைக்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jio to provide 300 minutes of free outgoing calls tamil news

Next Story
உங்கள் வாட்ஸ்அப் செய்திகளை பேக்கப் எடுக்க விரைவில் புதிய அம்சம் அறிமுகம்Whatsapp to add end to end encrypted backups option Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com