Advertisment

ஏர்டெல் மற்றும் ஜியோ டிவி எது பெஸ்ட் ?

ஏர்டெலில் 62 எச்.டி. சேனல்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jio TV vs Airtel TV

Jio TV vs Airtel TV

Jio TV vs Airtel TV : Content and additional features :  ஜியோ நிறுவனம் தொழில்நுட்பத்துறையில் கால் வைத்த காலத்தில் இருந்தே எக்கச்சக்க ஆப்கள், இலவச டிஜிட்டல் சேவைகள் என்று ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை அளித்து வருகிறது ஜியோ. அப்படியாகவே ஜியோ டிவியும்.

Advertisment

ஜியோவில் மட்டுமல்ல, எந்த ஒரு நெட்வொர்க் சிம் கார்டை நீங்கள் 4ஜியில் பயன்படுத்தினாலும், உங்களுக்கு டிவி செயலிகளை அவர்கள் வழங்கி வருகின்றனர். ஜியோ டிவி போலவே ஏர்டெல் சந்தா தாரர்களுக்கு ஏர்டெல் டிவி செயலியும் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு நீங்கள் தனியாக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் என்பது கூடுதல் தகவல்.

Jio TV vs Airtel TV : Content and additional features

ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்கம் உட்பட 640 சேனல்களை ஜியோ வழங்கி வருகிறது.

ஜியோவில் 138 எச்.டி. தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே வெளியான படங்கள் மற்றும், புதிதாக வர இருக்கும் படங்கள் மற்றும் அதன் ட்ரெய்லரை பார்க்க ஜியோ சினிமா என்ற செயலியைத் தான் பயன்படுத்த வேண்டும்.

ஜியோ ஈவன்ட்ஸ், ஜியோ ஸ்போர்ட்ஸ் போன்ற இதர சேவைகளையும் ஜியோ டிவியில் பெற்றுக் கொள்ளலாம்.

Airtel TV

ஏர்டெல் நிறுவம் 373 சேனல்களை வழங்கி வருகிறது.

ஏர்டெலில் 62 எச்.டி. சேனல்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.

ஏர்டெல் டிவி லைவ் டிவி சிறப்பம்சத்தினை மட்டும் தராமல் கூடவே படங்களை இலவசமாக பார்த்துக் கொள்ளவும் இயலும்.

ஏர்டெல் டிவியில் இருந்து டவுன்லோடு செய்வது மிகவும் எளிமையானது. அதற்காக நீங்கள் தனியாக எந்த ஒரு அப்ளிகேசனையும் பயன்படுத்த வேண்டாம்.

மேலும் படிக்க : டபுள் டமாக்கா என்றால் இது தான்… டாட்டா ஸ்கை அறிவித்திருக்கும் புதிய சலுகைகள் !

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment