இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஜியோ, தற்போது வருடாந்திர அன்லிமிடெட் 5G வவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த திட்டத்தின் மூலம் 12 மாதங்களுக்கு அன்லிமிடெட் 5ஜி பெறலாம். அதோடு இந்த வவுச்சரை ஒருவர் தங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு பரிசளிக்கலாம்.
ரூ.601 விலையில் இந்த Jio True 5G கிஃப்ட் வவுச்சர் பெறலாம். மை ஜியோ ஆப் சென்று இதை மாதம் ஒரு முறை ரிடீம் செய்யலாம். இருப்பினும், இந்த திட்டத்தை பெற ஒரு பயனர் குறைந்தபட்சம் தினமும் 1.5 ஜிபி பெறும் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். மாதாந்திர அல்லது காலாண்டு ரீசார்ஜ் திட்டத்தில் இருக்க வேண்டும்.
ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வவுச்சர் ரூ.199, ரூ.239, ரூ.299, ரூ.319, ரூ.329, ரூ.579, ரூ.666, ரூ.769 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் திட்டங்களில் உள்ளவர்களுக்கு வேலை செய்யும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“