Advertisment

ஜியோ, வி, ஏர்டெல் : ரூ.300-க்கு கீழ் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

Jio Vodafone Airtel best prepaid plans under Rs 300 ஜியோ, வி மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிலிருந்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களைப் பாருங்கள்.

author-image
WebDesk
New Update
Jio Vodafone Airtel best prepaid plans under Rs 300 Tamil News

Jio Vodafone Airtel best prepaid plans under Rs 300 Tamil News

Jio Vodafone Airtel best prepaid plans under Rs 300 Tamil News : ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) அன்லிமிடெட் டேட்டா மற்றும் அழைப்பு சலுகைகளுடன் ரூ.300-க்கு கீழ் சில சுவாரஸ்யமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. பயனர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாகவும், சில வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கு இலவச சந்தாவையும் பெறுகிறார்கள். நீங்கள் இந்த சலுகைகளைத் தேடுகிறீர்கள் மற்றும் ரூ.300-க்கும் குறைவாக செலுத்த விரும்பினால், ஜியோ, வி மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிலிருந்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களைப் பாருங்கள்.

Advertisment

ஜியோ vs வி Vs ஏர்டெல்: ரூ.300-க்கு கீழ் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஜியோ ரூ.249, ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது, 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட்  வாய்ஸ் அழைப்புகளுடன் அனுப்பப்படுகிறது. பயனர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறுகிறார்கள், மேலும், இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

ஜியோவின் அதிகாரப்பூர்வ தளத்தின்படி, வாடிக்கையாளர்கள் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தையும் முயற்சி செய்யலாம். இது 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் மொத்த டேட்டா 42 ஜிபி வரை வருகிறது. ஒருவர் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பையும் பெறுகிறார். மேலும், 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் என்பதும் இந்தத் திட்டத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஜியோ பயன்பாடுகளுக்கு காம்ப்ளிமென்டரி அணுகலை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.149, ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது. இது, அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கு 2 ஜிபி டேட்டாவையும் 30 நாட்கள் இலவச சோதனையையும் வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தாவும் அடங்கும். இந்த சேவையின் மூலம், பயனர்கள் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் அசல் திரைப்படங்களுடன் 10,000 திரைப்படங்களை ஈரோஸ்நவ், ஹங்காமா ப்ளே மற்றும் ஜீ 5 உள்ளிட்ட OTT தளங்களிலிருந்து பெறுகிறார்கள் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.

ரூ.279 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இது தினசரி 1.5 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் எச்.டி.எஃப்.சி ஆயுள் காப்பீடும் அடங்கும். மீதமுள்ள நன்மைகள் மேலே குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஒத்தவை.

Vi ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

Vi (முன்னர் வோடபோன் ஐடியா என்று அழைக்கப்பட்டது) ரூ.300-க்கு கீழ் ஓர் நல்ல ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது. ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. மேலும், வேறு எந்த டெலிகாம் ஆபரேட்டரும் இதுபோன்ற சலுகை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 2 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், இதில் இரட்டை டேட்டா உள்ளது, அதாவது இந்த திட்டத்துடன் நீங்கள் 4 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். பயனர்கள் உண்மையிலேயே அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வி மூவிகள் மற்றும் டிவி கிளாசிக் ஆகியவற்றிற்கான இலவச அணுகலைப் பெறுகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Recharge Plan Vodafone Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment