scorecardresearch

ஏர்டெல்,ஜியோ,வி: டேட்டா பூஸ்டரில் சிறந்த திட்டங்கள் பற்றி தெரியுமா?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களில் யார் சிறந்த டேட்டா பூஸ்டர் பிளேன் வைத்திருக்கீறார்கள் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

நாளுக்கு நாள் இன்டர்நெட் நேரம் அதிகமாகி கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, மாதம் 1ஜிபி டேட்டாவை வைத்து சமாளித்த நிலையில், தற்போது டெய்லி 2ஜிபி டேட்டா பத்தாத நிலை ஏற்படுகிறது. அதிகப்படியான செயலிகள் பயன்பாடுகள், அப்டேட்கள், கேம்கள் காரணமாக நமது டெய்லி டேட்டா விரைவில் தீர்ந்துவிடுகிறது. அத்தகைய சமயத்தில், டேட்டா பூஸ்டர் பேக் நிச்சயம் உதவியாக இருக்கும். அதன்படி, ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களில் யார் சிறந்த டேட்டா பூஸ்டர் ப்ளான் வைத்திருக்கீறார்கள் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

ஏர்டெல் டேட்டா பூஸ்டர் பிளேன்

ஏர்டெலில் குறைந்தப்பட்சமாக 58 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 3 ஜிபி டேட்டா கிடைத்திடும். அதே சமயம், 98 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 5 ஜிபியுடன் கூடுதலாக விங்க் மியூசிக் பீரிமியம் சப்ஸ்கிரப்ஷன் வசதி கிடைத்திடும். கூடுதலாக டேட்டா வேண்டும் என விரும்புவோருக்கு ரூ108 பிளேன் உள்ளது. அதில், 6 ஜிபி டேட்டாவுடன், இலவச ஹலோ ட்யூன் போன்ற பல அம்சங்கள் உள்ளன.

அதே நேரதத்தில், பெரியளவில் சாப்ட்வேர் அப்டேட், கேம் அப்டேட் டவுன்லோடு செய்பவர்களுக்கு 118ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 12 ஜிபி கிடைத்திடும். 148 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 15ஜிபி கிடைத்திடும். எல்லாவற்றுக்கும் மேலாக, 301ரூபாய்ககு ரீசார்ஜ் செய்தால் 50 ஜிபி கிடைத்திடக்கூடும்.

ஜியோ டேட்டா பூஸ்டர் பிளேன்

ஜியோ நான்கு விதமான டேட்டா பூஸ்டர் பிளேன்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி உங்கள் பழைய ரீசார்ஜ் காலம் வரை செலுப்படியாகும். அதாவது, 15 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டாவும், 25 ரூபாய்க்கு 2 ஜிபி டேட்டாவும், 61 ரூபாய்க்கு 6 ஜிபி டேட்டாவும், 121 ரூபாய்க்கு 12 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது.

இதுதவிர, ஜியோ அதிக டேட்டா வழங்கும் மூன்று வோர்க் ஃப்ரம் ஹோம் பிளேன்களை வைத்துள்ளது. இருப்பினும், இவை உங்கள் தற்போதைய பிளேன் வேலிடிட்டி காலத்துடன் பொருந்தாது. இவற்றின் வேலிடிட்டி காலம் 30 நாள்கள் ஆகும்.

181 ரூபாய்க்கு 30 ஜிபி டேட்டாவும், 241 ரூபாய்க்கு 40 ஜிபி டேட்டாவும், 301 ரூபாய்க்கு 50 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இதுதவிர, 296 ரீசார்ஜ் பிளேனில் 30 நாள்களுக்கு 25 ஜிபி கிடைக்கிறது. இதனை, மைஜியோ செயலியில் காணலாம்.

வோடபோன் ஜடியா டேட்டா பூஸ்டர்

வோடபோன் ஐடியா பல பூஸ்டர் பிளேன்களை கொண்டிருந்தாலும், அவை தற்போதைய திட்டத்தின் வேலிடிட்டியுடன் சேராது. அனைத்து திட்டங்களுக்கு தனித்தனியாக வேலிடிட்டி காலம் உள்ளது.

19 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி டேட்டா 24 மணி நேரம மட்டும் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் கிடைத்திடும். 48 ரூபாய் திட்டத்தில் 2 ஜிபி டேட்டா 21 நாள்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும். 58ரூபாய் பிளேனில் 3 ஜிபி டேட்டா 28 நாள்களுக்கும், 98 ரூபாய் பிளேனில் 9ஜிபி டேட்டா 21 நாள்களுக்கும் கிடைக்கக்கூடும்.

அதிக டேட்டா கிடைக்கும் பிளேன்களும் வோடபோனில் உள்ளன. 118 ரூபாய்க்கு 12 ஜிபி டேட்டா 28 நாள்கள் வேலிடிட்டியுடனும், 298 ரூபாய்க்கு 50 ஜிபி டேட்டா 28 நாள்கள் வேலிடிட்டியுடனும், 418ரூபாய்க்கு 100ஜிபி டேட்டா 56 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Jio vs airtel vs vi best data packs for when your daily limit is exhausted